"கோவிச்சுக்காதீங்க", என்றார்கள் கனவில் அவர்கள்.
போலியாய் புன்னகைத்த நான் சொன்னேன், "எனக்கு கோபமில்லை. வருத்தம்", என்று.
"ப்ளீஸ். வருத்தப்படாதீங்க", என்றார்கள் அவர்கள்.
"கோபத்த கட்டுப்படுத்துறது என் கையில இருக்கலாம். ஆனா வருத்தம் மத்தவங்க ஏற்படுத்துறது. வருத்தப்பட வைக்கிறதும் வைக்காம இருக்கிறதும் மத்தவங்க கையில தான் இருக்கு", என்றேன் நான்.
விழிப்பு வந்தது. கனவின் காட்சிகள் காணாமல் போய் இருந்தன. உணர்வுகளோ மிச்சமிருந்தன. கனவுகளில் இருந்து நிஜ உலகிற்கு எதுவுமே வருவதில்லை. ஆனால் நிஜ உலகின் சிலதுகள் தானே கனவின் காட்சிகளை உருவாக்குகின்றன.
--
பால் ஆரோக்கியம் | Paul Arockiam
No comments:
Post a Comment