Tuesday, August 4, 2015

கனவுகளும் நானும்

என் கனவுகளை நான் மொத்தமாக பற்றிக் கொண்டு மேலெழ முயல்கிறேன். கனம் தாங்காமல் சோர்ந்து போய் விடுகிறேன். பிறகு என் சக்திகளை ஒன்று திரட்டி மீண்டும் எழுகிறேன். சிறிதொரு அங்குலம் மேலே நகர்கிறேன். சோர்வதும் எழுவதுமான சுழற்சிக்கிடையில் என் இலக்கை தேடி இடையறாது தேடிக் கொண்டே இருக்கிறேன்.

"ஏன் இத்தனை சிரமம்..? ஒவ்வொன்றாக எடுத்து செல்லலாமே", என்பவர்களுக்கு நான் புன்னகையை தவிர வேறு எதையும் பதிலாக அளிப்பதில்லை. புன்னகையைத் தவிர வேறு எதையும் அவர்கள் புரிந்து கொள்வார்களா என்பதில் எனக்கு எப்போதும் ஒரு சந்தேகமே.

--
பால் ஆரோக்கியம் | Paul Arockiam 

No comments:

Post a Comment