Monday, June 29, 2009

மங்கிய இரவில் சில பதிவுகள்..

நேற்று இரவு ரெயிலில் திருச்சியில் இருந்து பெங்களுருக்கு வந்து கொண்டிருந்தேன். நள்ளிரவை நெருங்கும் அந்த வேளையில், நான் பயணித்துக் கொண்டிருந்த ரெயில் சிறிது நேரம் ஒரு சந்திப்பின் அருகே நின்றுக் கொண்டிருந்தது.. அதே நேரம் பக்கத்து தண்டவாளத்தில் இன்னொரு ரெயிலும் நின்றுக்கொண்டிருக்க, எனது பார்வையை ஜன்னலின் வழியே எதேசையாய் திருப்பினேன்.. மங்கிய ஒளியினூடே அந்த ரெயில் பெட்டியில் கழிவறையின் கதவருகே, சோகம் அப்பிய முகத்துடன் நடுத்தர வயதை தாண்டிய ஒரு பெண்மணி சிறிய துணி மூட்டையுடன் அமர்த்திருந்த காட்சி, என்னவோ தெரியவில்லை என் மனதை வெகுவாக பாதித்தது..

கலைந்த தலையும், ஒளிவிழந்த முகமும், சற்றே அழுக்கான உடையுடனும் அமர்த்திருந்த அந்த பெண்மணியை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிடலாம், ஆழ்ந்த கவலையுடன் எங்கே போகிறோம் என்றே தெரியாத ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்று..

இரவின் மௌனத்தைக் கலைத்து மெல்லிய சலனத்தை மனதினுள் ஏற்படுத்தியது அந்த பெண்மணியின் சோக காட்சி.. எழுந்து போய் அந்த பெண்மணியின் அருகில் அமர்ந்து, 'ஏன் இவ்வளவு சோகம்? மனச்சுமையை பகிர்ந்து கொள்ள ஆளில்லை என்றால் என்னிடம் சொல்லி உங்கள் மனதின் பாரத்தை கொஞ்சம் இறக்கி வையுங்களேன்..' என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது..

இரவின் நிசப்தத்தை மெலிதாய் கிழித்துக்கொண்டு எனது ரயில் மெல்லமாய் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கியது.. கனமான இதயத்துடன் நானும்..

2 comments:

  1. நன்றாக பதிந்திருக்கிறீர்கள்!!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி அருணா.. :-)

    ReplyDelete