பரவசப்படுத்தும் எந்த ஒரு விசயமுமே என்றாவது ஒரு நாள் மறக்க முடியாத ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.. அதற்காக எந்த சூழ்நிலையையும் அல்லது எந்த மனிதரையும் நம்பாதீர்கள் என்று சொல்ல வரவில்லை நான்.. என்னவோ தெரியவில்லை, எந்த ஒரு நட்போ, உறவோ அல்லது பழக்கமோ பரவசத்தை சில நாட்கள் கொடுத்தாலும், கூடிய விரைவிலேயே அது ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது..
ஒருவேளை அத்தகைய உறவுகள் உள்ளுக்குள் சில எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திவிடுவதாலேயோ என்னவோ அவை மனதிற்கு கொஞ்சம் அவஸ்தையையும் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றன..
நன்றாக பழகும் சிலர் திடீரென்று பழகும் விதத்தில் வித்தியாசம் காட்டும் போது அதை என்னவோ மனம் ஏற்க மறுக்கின்றது.. 'இது இப்படி தான் வாழ்க்கையில் நடக்கும்.. எந்த ஒரு நட்பும் அல்லது உறவும் நிரந்தரமில்லை ' என்று எவ்வளவு தான் தெரிந்தாலும், உணர்வுகளுக்கு அது புரியவா போகின்றது???
என்ன செய்வது!! 'இதுவும் கடந்து போகும்..' என்று பொறுமையாக இருக்க வேண்டியது தான் :-)
No comments:
Post a Comment