பெரும்பாலான நேரங்களில் வேலை பளுவின் காரணமாக எனது நண்பர்களுடனான எனது தொடர்பில் சிறிய இடைவெளி விழுவதுண்டு... அப்படி சில வாரங்கள் நான் பேசாமல் இருந்து விட்டு, மீண்டும் தொலைப்பேசியில் அழைக்கும் போது, எனது நண்பர்களில் ஒருவன் மட்டும் எப்போதுமே, "ஏன்டா நாயே... உனக்கு இப்போ தான் என் ஞாபகம் வந்துச்சா? நீயெல்லாம் ஒரு நண்பனா டா? உனக்கு எப்போ என் ஞாபகம் வந்து நீ போன் பண்ணுற அப்படினு பாக்க தான் நானும் உனக்கு போன் பண்ணாமலேயே இருந்தேன்...", என்று ஆரம்பித்து கண்ணா பின்னாவென்று என்னை இரண்டு நிமிடங்களாவது திட்டிவிட்டு தான் அவன் சாதாரணமாக பேச ஆரம்பிப்பான்...
என்னமோ தெரியாது, அவன் திட்டும் போது மட்டும் எனக்கு கோபத்திற்குப் பதிலாக சிரிப்பு மட்டுமே வரும்... நான் சிரிப்பதற்கும் சேர்த்து மேலும் சில வினாடிகள் அவன் திட்டுவான்... "உனக்கு என்ன தான் வேலை இருந்தாலும், இரண்டு நிமிடம் எனக்கு கால் பண்ணி, 'என்ன ஜெயராமா எப்படி இருக்க?' அப்படினு உன்னால கேட்க முடியாதா?" என்று என் மீது உரிமையோடு கோபப்படும் என் நண்பன் 'ஜெயராம்'ன் கோபம் எனக்கு எப்போதுமே பிடித்த ஒன்று...
No comments:
Post a Comment