Tuesday, October 14, 2008

அவனும் வந்தான் கல்லூரிக்கு...

சில கவிதைகளைப் படிக்கும் போது, 'அடடே நமக்கு இது தோன்றவில்லையே...' என்று எனக்கு தோன்றுவதுண்டு... அப்படிப்பட்ட கவிதைகளும், கவிதை வரிகளும் எப்போதுமே என்னை திரும்ப திரும்ப படிக்க தூண்டும்... அப்படி நான் ரசித்த கவிதைகளில் ஒன்று தான் என் நண்பன் ஜானி பிரகாஷ் எழுதிய "அவனும் வந்தான் கல்லூரிக்கு"...

"எதிர்காலத்தின் முகவரி தேடி
நாங்கள் - நிகழ்காலம்தேடி அவன்

பெற்றோரின் தலையில் சுமை வைத்து
சுற்றி திரிந்த எங்களுடன் - அவன்
குடும்ப சுமை குறைந்தளவு குறைக்க

ஈன்றவர்களின் வியர்வையெல்லாம்
நறுமனமாய் எங்கள் சட்டையில் - தன்
வியர்வையில் வீட்டிற்கே நறுமணம் அளிக்க

புத்தகம் தூக்காமல்
புதுச்சட்டை அணியாமல்
உயர்நிலை கற்காமல்
ஒன்பது அகவை தாண்டாமல்
அவனும் வந்தான் கல்லூரிக்கு

உணவகத்தில் தட்டு கழுவும் வேலைக்கு .."


சமுதாய அக்கறையும், பொதுநலப் பார்வையும் உள்ளவர்களுக்கு மட்டுமே தோன்றும் எண்ணங்களின் எழுத்து வடிவங்கள்.. எத்தனையோ முறை என் கல்லூரியில் இது போன்றவர்களை நான் பார்த்திருந்த போதிலும், 'என் மனதில் தோன்றவில்லையே இந்த கவிதை' என்ற ஏக்கம் இதை படித்த போது எனக்கு ஏற்பட்டது...

நான் 'படித்தவைகளில் எனக்கு பிடித்தவை'களில் இதுவும் ஒன்று...

ஜானி பிரகாஷ் எழுதிய மாற்ற கவிதைகளை இங்கே படிக்கலாம்...

No comments:

Post a Comment