என் நண்பன் 'ஜெயராம்'ன் கவிதைகள் எப்போதுமே என் மனம் கவர்பவை... குடும்பத்தை விட்டு பல மைல்கள் தொலைவில் 'வேலை செய்கிறோம்/தேடுகிறோம்' என்கிற பெயரில் தாய், தந்தை, சகோதர சகோதரிகளின் அருகாமையை தொலைத்து வருந்தும் எல்லாருக்கும் இந்த கவிதை மிகவும் பிடிக்கும்... அந்த வகையில் இது என் மனம் கவர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை...
"விடியல் ஞாபகத்தில்
விழித்துக்கொண்டது
இமைகள்..
காசில்லா நேரங்களில்
தந்தையின் ஞாபகம்
பசிவரும் நேரங்களில்
தாயின் ஞாபகம்..
உண்ணும் தருவாயில்
'இன்னும் கொஞ்சம்..
இன்னும் கொஞ்சம்..'
அக்காவின் ஞாபகம்
கூடத்தில் நான் மட்டும் -
தங்கையின் ஞாபகம்
சாலையோரத்தில் நடந்து சென்றேன்
கால் வலித்தது
அண்ணாவின் ஞாபகம்
உணர்வுகளுக்கிடையே
உணவு மட்டும -
இடை விட்டு..
விதியை நினைத்தபடி
இமைமூடி அமர்ந்தேன்..
"என்னடா சாப்டியா.." கேட்டவாறே
உள்ளே நுழைந்தான்
நண்பன் -
அம்மாவின் அசரிரி.."
இந்தக் கவிதையைப் படிக்கும் போது, அப்படி ஒரு சூழலில் உள்ள ஒருவனின் உணர்வுகளை அப்படியே படிப்பவரின் மனதிற்குள் உணர முடியும்... நான் படித்தவைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...
'ஜெயராம்'ன் மற்ற கவிதைகளை நீங்கள் இங்கே படிக்கலாம்...
No comments:
Post a Comment