சில நாட்களுக்கு முன்பு எதேச்சையாய் ஒரு புத்தக கண்காட்சி சென்றிருந்த போது கண்ணில் பட்ட ஒரு சிறிய கவிதை புத்தகம் ஒன்றை வாங்கினேன்... "குழந்தைகள் ஊருக்குப் போய்விட்டன" என்று தலைப்பிட்டிருந்த அந்த கவிதை புத்தகத்தில் பெரும்பாலான கவிதைகள் மிக அருமையாக இருந்தன...
குறிப்பாக என் மனம் கவர்த்த ஒரு கவிதை இதோ...
"துடைப்பம்,
பால் பாக்கெட்,
கரண்டி,
காய்கறி,
அழுக்குத் துணி,
சோப்பு... என
ஏதேனுமொன்று
அக்காவின் கைகளில்
எப்போதும் தென்படும்.
வீட்டுக்கு ஒதுங்கும்
'அந்த' நாட்களில் மட்டும்
அபூர்வமாய் பார்க்க முடிகிறது -
அக்காவின் கையில்
புத்தகமொன்றை."
சமூகத்தில் இன்னமும் சில கிராம நகரங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளையும், இன்னமும் பல வீடுகளில் பெண்கள் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று தொடரும் குறுகிய மனப்பான்மையையும் மெலிதாய் வெளிச்சம் போட்டு காட்டும் 'மு.முருகேஷ்'ன் இந்த கவிதை, என் மனதைக் கவர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை...
No comments:
Post a Comment