சில நாட்களுக்கு முன்பு, நானும் என் நண்பனும் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தோம்... அப்போது எனது அடுத்த சகோதரியின் திருமணம் பற்றிய பேச்சு வந்த போது, நான் எதிர்பார்க்கும் பணப் பற்றக்குறை பற்றி அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்... சில மாதங்களுக்கு முன்பு தான் எனது ஒரு சகோதரியின் திருமணத்திற்காக நான் எடுத்திருந்த loan பற்றி சொன்னேன்... அதனால் மீண்டும் ஒரு loan உடனே கிடைப்பது கஷ்டம் என்று அவனிடத்தில் நான் சொல்லிக்கொண்டிருந்த போது, "ரொம்ப யோசிக்காதடா... நான் எப்படியும் இன்னும் சில வாரங்களில் வேலையில் சேர்ந்து விடுவேன்... நான் உனக்கு லோன் எடுத்து தருகிறேன்... அதை வைத்து திருமணத்தை நடத்தி விடலாம்...", என்று சொன்னான் அவன்...
என் சகோதரியின் திருமண பேச்சை பற்றி எதேச்சையாக தான் பேச ஆரம்பித்தோம்... அவன் அப்படி சொல்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை... அவன் அப்படி சொன்னது எனக்கு ஆறுதலாய் இருந்தது... அவன் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன... எனக்கு உதவ நினைத்த அந்த நண்பன் பாலாஜி'ன் சிநேகம் எனக்கு எப்போதுமே பிடித்த ஒன்று...
No comments:
Post a Comment