Saturday, January 15, 2011

காதல் சார்ந்தவை [4]: நீயருகில் இல்லாத பொங்கல்..!!


Photo, originally uploaded by lenin1985.
நீயருகில் இல்லாததாலோ என்னவோ பொங்கல் கூட கசக்கிறதடி.. உன் அருகாமை உணரும் நாட்களிலெல்லாம் பண்டிகைக்கால குதூகலத்தை விட அதிகமான மகிழ்ச்சியை உணரும் மனம், நீ எட்டி போய்விடும் வேளைகளிலோ பண்டிகையாகவே இருந்தாலும் கூட வாடிய மலராக வசமிழந்து தவிக்கிறது..!

எல்லோரும் கரும்பு கடித்து சுவைத்து மகிழ்கின்றனர்.. சிறுவயது முதலே கரும்பென்றால் உயிர் எனக்கு உன்னை காணும் வரை. முதன்முறை உன் இதழ்களை சுவைத்த பின்பு கரும்பிலோ அதன் தித்திப்பிலோ நாட்டமிழந்து விட்டது மனம்.. அதன் பிறகு தினந்தோறும் நாம் கொண்டாடுகிறோம் பொங்கல்.. ஆனாலும் திகட்டவில்லை.. இனிப்பான எதுவுமே அதிகம் உண்டால் திகட்டும் என்று சொல்வது மூடநம்பிக்கை என்பதை உணர்த்தியவள் நீ..

தினமும் நாம் சேர்ந்திருக்கும் போதெல்லாம் பொங்கல் கொண்டாடுவதையொத்த மகிழ்ச்சி ஏற்பட்டாலும் கூட இன்னும் வேண்டுமென்பதான ஏக்கமும் ஆசையும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.. என்றென்றும் இருக்கும் இந்த ஏக்கமும் ஆசையும்.. இன்று நீ குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடி கொண்டிருக்கின்றாய். நானோ இங்கு உன் அருகாமையின்றி தவித்தபடி அமர்ந்திருக்கின்றேன்.. இன்னமும் விடிந்திடாத விடியலின் நிமித்தம் நாமிருவரும் ஒன்றாய் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது அதில் வரும் நேரடி ஒளிபரப்புகளிலோ மனம் லயிக்கவில்லை.. அதிகாலையில் எழுந்து புள்ளிகள் இணைந்து நீ கோலம் போடுவதையும், வண்ணம் தூவி அக்கோலங்களை நீ அலங்கரிப்பதையும், குளித்த பின்பு துவட்ட மறந்த நீர்த்துளிகள் சில உன் மேனியில் மின்னுவதையும், இமை மூடியபடி கைகூப்பி செல்லமாய் உன்னுதடுகளால் முணுமுணுத்தபடி நீ சாமி கும்பிடுவதையும், குடும்பத்தாருடன் சேர்ந்து நீ பொங்கல் பொங்கி கொண்டாடுவதையும் இமை மூடி கற்பனை செய்து ரசித்த வண்ணமிருக்கின்றேன்.. கரும்பை நீ மென்மையாய் கடிக்கும் காட்சி கற்பனையில் வரும் போது ஏனோ தெரியவில்லை கரும்பை விடுத்து உன்னுதடுகள் மட்டுமே என் கண்களுக்கு தெரிகின்றன.. நீயும் நானும் சேர்ந்து பண்டிகைகளை கொண்டாடும் நாள் எப்போது வருமென்பதான ஏக்கம் பெருக்கெடுக்கின்றது என் நெஞ்சுக்குள்.. உன் அருகாமைக்காக ஏங்கி தவித்திருக்கின்றேன் என் அன்பே..! ஐ மிஸ் யூ, மை டார்லிங்..!!

5 comments:

  1. மெய்ல் அனுப்பியாச்சு தானே? பதில் வந்துடுச்சா?

    ReplyDelete
  2. ஷஹி :)

    இன்னிக்கு தான் வந்துச்சு.. மேடம் அவ்ளோ பிஸி.. :)

    ReplyDelete
  3. தினந்தோறும் நாம் கொண்டாடுகிறோம் பொங்கல்.. ஆனாலும் திகட்டவில்லை...Romba feel panni solreengaloo.....but really so wonderful..

    ReplyDelete
  4. bharathi :)

    ஹ்ம்ம்.. ரொம்ப ஃபீல் பண்ணி எழுதினது தான்.. :)

    ReplyDelete
  5. நோ நோ பீலிங்க்ஸ்
    அப்பறம்
    நாம அப்படீய இருந்து இருக்கலாம் என்று கவிதை எழுதலாம் ...

    ReplyDelete