"சொன்னா புரியாது", 2013 ஜூலையில் வெளிவந்த தமிழ் திரைப்படம். சமீபத்தில் தற்செயலாக காண நேர்ந்தது. காமெடி திரைப்படம். படத்தை ஆரம்பத்தில் இருந்து பார்க்கவில்லை. இடையில் சில காட்சிகளைப் பார்த்ததிலேயே ஏனோ அதன் நகைச்சுவை என் கவனத்தை தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து படம் முழுவதுமே பார்த்து முடித்து விட்டேன்.
படத்தை எடுத்தது இளம் (புதிய - என்னும் அர்த்தத்தில் படிக்கவும்) டைரக்டர் கிருஷ்ணா ஜெயராஜ். படத்தைப் பார்த்துக் கொண்டே வரும் போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எவ்வளவு அழகாக நகைசுவையை கையாண்டிருகிறார்கள் இந்த படத்தில் என்று. கிட்டத்தட்ட இருண்ட நகைசுவை (Black Comedy)யும் கலந்து நன்றாகவே படத்தின் கதையும் திரைக்கதையும் எழுதபட்டிருப்பதாக தோன்றியது.
இடைவேளைக்கு பின்னால் வந்த ஒரு காட்சி தான் படத்தின் மேலிருந்த மதிப்பை சட்டென்று கீழே போட்டு உடைத்து விட்டது. அது பிம்போ (ஒரு கேரக்டர்) ஸ்வேதாவை லவ் பண்ணாமல் ரிஜெக்ட் பண்ணி விட்டதாக கூறி வரும் ப்ளாஷ்பேக் காட்சிகள். பாரில் (bar) அவனது பிளேட்டில் இருந்து சிக்கன் துண்டை அவள் எடுத்து சாப்பிட்டு விடுகிறாள். அதற்காக அவன் அவளை காதலிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு சோகமாகி விடுகிறான். "உன் பிளேட்டிலேயே கை வச்சுட்டாளா..?", என்று அவன் நண்பர்கள் அவனுக்கு பரிதாபப்படுகின்றனர். பிம்போ உணவை பகிர்ந்து கொள்பவன் அல்ல என்பதான அர்த்தத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த நகைசுவை அப்படியே "ப்ரெண்ட்ஸ்" (F-R-I-E-N-D-S) என்னும் ஹாலிவுட் டெலிவிஷன் சீரிஸில் இருந்து உருவப்பட்டு இருக்கிறது. சீசன் 10, எபிசோட் 9 என்று நினைக்கிறேன். அதில் "Joe doesn't share food" என்று வரும் நகைசுவை மிகவும் பிரபலம். (Reference : http://www.friends-tv.org/zz1009.html , http://www.youtube.com/watch?v=iCCzzZVVpIA ). நீங்களே கூட "Joe doesn't share food" என்று கூகிளில் தேடித் பாருங்கள். ப்ரெண்ட்ஸில் அந்த ஒரிஜினல் காட்சியை மிகவும் அழகாக எடுத்திருப்பார்கள். பார்க்கும் போது அவ்வளவு சிரிப்பு வரும்.
ஒரிஜினாலிட்டி இல்லாமல் ஹாலிவுட் டெலிவிஷன் சீரிஸில் இருந்து உருவி எழுதி இருந்தாலும், அதே மாதிரியான காட்சியை இந்த படத்தில் பார்த்த போது சிரிக்கவே செய்தேன். அது ஒரிஜினல் ப்ரெண்ட்ஸ் காட்சியை நினைவூட்டியதால்.
சொல்ல வருவது என்னவென்றால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இந்த உண்மையை என்னால் கிரகிக்க முடிந்ததால் படத்தின் மேலிருந்த மதிப்பு போய் விட்டது. இன்னும் என்னென்ன நகைசுவை எங்கெங்கிருந்து உருவப்பட்டு இப்படத்தில் சொருகப்பட்டதோ, யாருக்கு தெரியும் ? வருத்தமான விஷயம் என்னவென்றால் ஏன் நம் டைரக்டர்களிடம் ஒரிஜினல் ஐடியாவே இல்லையா ? - என்னும் மிக பெரிய கேள்வியை இத்தகைய நிகழ்வுகள் நமக்குள் ஏற்படுத்துவது தான்.
இது தமிழ் சினிமாவின் அவலம் என்று சொல்லாம். இந்த அவலத்தை மனதிலிருந்து தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால், "சொன்னா புரியாது" ஒரு நல்ல காமெடி திரைப்படம் தான். என்ன, படத்தின் நகைசுவைகள் எல்லாம் கொஞ்சம் ஒரிஜினலாக இருந்திருக்கலாம்.
-- பால் ஆரோக்கியம்

No comments:
Post a Comment