இன்கம் டாக்ஸ் ரிடர்ன்ஸ் பதிவு பண்ணி விட்டீர்களா..? பண்ணலேன்ன பண்ணிடுங்க.. இன்னிக்கு தான் கடைசி நாள்.. வழக்கம் போல இந்த தடவையும் கடைசி தேதியை நீட்டிக்க வாய்ப்புகள் அதிகமென்றாலும் கூட, 'இருக்கிற தலைவலி போதாதா..? இதை வேறு எதற்காக சுமக்க வேண்டுமெ'ன்று நேற்று நானும் எனது நண்பனும் பைக் எடுத்துக் கொண்டு நேராக இன்கம் டாக்ஸ் அலுவலகத்திற்கே சென்று பதிந்து கொண்டு வந்துவிட்டோம்.
'இதுக்கெல்லாம் ஒரு பதிவா..?' என்று கேட்காதீர்கள். இதை பதிப்பதற்கு காரணம், இன்கம் டாக்ஸ் ரிடர்ன்ஸ் பதிவு செய்வது எவ்வளவு எளிதானது என்பதை எடுத்து சொல்வதற்காக தான். பெரும்பாலான உங்களை போல தான் நானும் ஏதாவது ஒரு தரகர் மூலமாக நூறு ரூபாயோ அல்லது நூற்றைம்பது ரூபாயோ கொடுத்து முன்பெல்லாம் பதிவு செய்து கொண்டிருந்தேன். அப்படி நான் செய்வதற்கு காரணம் 'இதற்காகவெல்லாம் யார் மெனக்கெடுவார்கள்..?' என்பதான எண்ணம். 'அதுவும் இல்லாமல் அங்கே நிறைய ஃபார்மாலிட்டீஸ் இருக்கலாம்' என்று நான் தவறான எண்ணத்துடன் இருந்தது தான்.
இந்த முறை எனது நண்பனொருவன், "வா.. நாம் இந்த முறை நேரில் சென்று என்ன தான் இருக்கிறதென்று பார்க்கலாம்.. இதில் நமக்கு ஒரு முறையாவது அனுபவம் வேண்டாமா..?" என்பதாக சொல்ல, நானும் சரி போய் தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தேன்.
ITR ஃபார்மை நிரப்புவது மிகவும் எளிதான வேலை தான். அதை உங்களுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் உதவியுடன் ஒரு முறை நிரப்ப கற்றுக் கொண்டுவிட்டால் எளிது தான். அதை நிரப்புவதற்கு தேவையான எல்லாமே உங்களுடைய ஃபாரம் 16-ல் இருக்கும். இன்கம் டாக்ஸ் அலுவலகத்திற்கு சென்றதில் இருந்து அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் தான் இருக்கும் எங்களது ரிடான்ஸ்-ஐ பதிவு செய்ய எடுத்துக் கொண்ட நேரம். வரிசையில் நிற்பதற்கும் பதிவு செய்வதற்கும் மொத்தமே ஒரு நிமிடம் தான் ஆனது (பெங்களூரில்).. காரணம் நிறைய பதிவு சாவடிகளை (booth) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தது தான். நிச்சயமாக எல்லா ஊர்களிலேயும் இந்த மாதிரியான வசதிகள், அதுவும் குறிப்பாக இந்த நேரத்தில் செய்திருப்பார்கள்..
எனவே நேரில் சென்று ஒரு முறை பதிந்து தான் பாருங்களேன்.. இந்த முறை தவற விட்டு இருந்தீர்களேயானால் அடுத்த முறை நேரில் செல்லுங்கள்.. நான் அப்படி சொல்வதற்கு காரணம், நீங்களே நேரில் செல்லும் போது நிச்சயமாக சுய மனநிறைவு ஏற்படும் என்பது உண்மை.. இது என் அனுபவம்.. சொல்லத் தோன்றியது, அதனால் சொல்கிறேன்..!!
No comments:
Post a Comment