கண்ணாமூச்சு ஆடியது போதும்.. நீ ஓடி ஒளிந்த பின்பு உன்னை கண்டுபிடிக்க தாமதமாகும் ஒவ்வொரு கணமும் மரணத்தின் விளிம்பில் நிற்பதை போன்றதொரு உணர்வு உள்ளுக்குள் படர்வதை என்னால் தடுக்க முடியவில்லை. விளையாட்டின் இடைவெளிகளினூடே கூட விபரீதமாக சிந்திக்கும் என் மனம் நீ விட்டு விலகுவது விளையாட்டல்ல என்று தெரிந்தால் எப்படித் தாங்கிக் கொள்ளும்..
'விட்டு விடலா'மென்று இனி நீ விளையாட்டிற்கு கூட சொல்லாதே.. இதழ் சுருக்கி முகம் திருப்பி 'போய் விடு' என்று நீ சொல்வதற்கு தேனருந்தி தாவிச் செல்ல வந்த வண்டல்ல நான்.. உரையாடி உடனிருக்கவும், உடல் தாண்டி உயிர் சேரவும், உடன் துயில்கொண்டு துணையிருக்கவும், மடி தந்து தலைக்கோதவும், தோள் தந்து விழிநீர் துடைக்கவும் ஒற்றை வரம் வாங்கி லட்சம் அணு தாண்டி உனக்காக ஜனித்த உயிர் நான்..
நீ தொலைவில் இருப்பதான சிந்தனைத் தட்டும் போதே நீளும் நிமிடங்கள், நீ தொலைந்து போகிறாய் என்பதை உணர்ந்தால் ஸ்தம்பித்து போகாதா..? பொதுவாகவே, நீர்த்திவலைகள் ஆனந்த தருணங்களில் மட்டுமே எட்டிப் பார்க்கும் என் விழிகளில் இப்போது அழுகையின் காரணமாய் பல கண்ணீர்த்துளிகள்.. இறுக்கம் தளர்த்துவது கைப்பிடியில் தானே என்று வாதிக்கும் உனக்கு ஏன் தெரியவில்லை அது வாழ்வின் மீதான பிடிப்பையே என்னுள் தகர்க்கிறது என்பதை..
வரிகளை பிரித்து எழுதியிருந்தால் நன்றாக இருக்கும் .....
ReplyDeleteசற்று வெட்கம் கொள்வோம் ,சிந்திப்போம் .. இதுவும் ஆயுத பூஜை தான் .
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html
நன்றி சுதர்ஷன்..!!
ReplyDelete