"ஆமாங்க.. இந்த நாய்ங்க தொல்ல தாங்க முடியல"..
கொஞ்சம் பொறுங்கள்.. மக்களை ஏமாற்றும் சில [ 'சில'வா ??!?] அரசியல்வாதிகளையோ அல்லது போக்குவரத்து சந்திப்பில் வேலையை கவனிக்காமல் தெருவோரம்.. சீ.. சீ.. சாலையோரம் நின்றபடி இருசக்கர அல்லது நான்குசக்கர வாகனங்களை தேவையில்லாமல் நிறுத்தி பணம் வசூலிக்கும் சில (?!??) போக்குவரத்து அதிகாரிகளையோ அல்லது வேலையை செய்வதற்கே லஞ்சம் வாங்கும் சில (??!?) அரசுத்துறை அதிகாரிகளையோ அல்லது மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, கோதுமை மற்றும் பருப்பு உள்ளிட்டவற்றை கடத்தி ஏழைகளின் வயிற்றிலடிக்கும் சில (?!??) ரேஷன் கடை ஊழியர்களையோ அல்லது பொதுவாகவே சாதாரண மக்கள் வயிறெரிந்து 'நாய்ங்க' என்று ஏசும்படியாக நடத்துக் கொள்பவர்களையோ நான் இங்கே நாய்களென்று குறிப்பிடவில்லை.. அதற்காக நான் மேற்சொன்னப் பட்டியலில் உள்ளவர்களுக்கும் நாய்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நீங்கள் கேட்பீர்களேயானால், "மன்னிக்கவும், நான் அந்த விவாதத்திற்கு இப்போது வரவில்லை"..
நான் தொல்லை தாங்கவில்லையென்று குறிப்பிட்டது உண்மையான நாய்களை.. அதாவது நான்கு கால்கள், இரண்டு காது, முன்புறம் சற்றே நீண்டிருக்கும் முகம், குறிப்பாக பின்புறம் வாலுடன் 'உர்ர்ர்ர்' என்று உறுமுவதும் 'லொள்' என்று குரைப்பதுமான மொழியைக் கொண்ட விலங்கின வகையை சேர்ந்த நாய்களை தான். "ஹப்பா.. நாய்கள் என்பதை மக்கள் பலவற்றுடன் குழப்பி புரிந்துக் கொள்வதால், நான் சொல்ல வருவது என்ன என்பதை விளக்கி புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது"..
என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்..? ஹா.. பெங்களூருல இந்த நாய்கள் தொல்லை உண்மையிலேயே தாங்க முடியலைங்க. தெருவில் கால் வைக்க முடியவில்லை. அதுவும் இருள் பரவத் தொடங்கிவிட்டால் அவற்றின் ஆதிக்கம் அதிகமாகிவிடுகிறது. எல்லாமே கிட்டத்தட்ட வெறிப் பிடித்த நாய்கள். எப்போது நம் மீது பாயுமென்று பயந்துக் கொண்டே போக வேண்டியதாயிருக்கிறது. அதற்கு காரணம் பல நேரங்களில் பலர் மீது அவை பாய்ந்தும் கடித்தும் இருப்பதால் தான்.
அதுவும் பின்னிரவு நேரங்களிலோ அல்லது அதிகாலைப் பொழுதுகளிலோ இருசக்கர வாகனங்களில் போகும்போது நான்கைந்து நாய்கள் ஒன்று சேர்ந்துக் கொண்டு துரத்துவதும் பல நேரங்களில் சீறிப் பாய்ந்து கடிப்பதுமாக இவற்றின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இரண்டு மூன்று முறை நானே மயிரிழையில் கடி வாங்காமல் தப்பித்து வந்திருக்கிறேன்.. அதனாலேயே ஊரடங்கியப் பின்பும் ஊர் விழிப்பதற்கு முன்பும் வீதியில் இறங்க நிறையவே பயமெனக்கு.. எனக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் பலருக்கும் தான்.
தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு நாய்களின் தொல்லை இல்லை என்பது நிச்சயம். இங்கு ஐம்பது மீட்டர் அளவே உள்ள சிறியத் தெருவில் கூட குறைந்தது ஐந்து நாய்களையாவது காண முடியும். அதிகபட்சம் பத்து பதினைந்து என்று கூட இருக்கலாம். ஒரு குறுகிய சந்தில் கூட இரண்டு மூன்று நாய்கள் இருக்கும்.
நான் பார்த்தவரையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான நாய்கள் சாதுவானவை.. சில நாய்களே அங்கு சீறிப் பாய்ந்துக் கடிக்கும் ரகத்தை சேர்ந்தவை. அங்கிருக்கும் பெரும்பாலான நாய்கள் குரைத்தாலும் கூட நாம் அதட்டினாலோ குனிந்து கல்லெடுத்தாலோ அவை அடங்கிப் போய்விடும். ஆனால் இங்கிருக்கும் நாய்களோ மூர்க்க குணம் கொண்டவை.. இங்கு வெகு சில நாய்களே சாதுவாய் பணிந்து போகும் ராகம். மற்றவையோ நாம் அதட்டினாலும் கூட எதிர்த்து நின்று குரைத்தபடியே பாய்ந்து தாக்க தான் முயலும்.
நான் கவனித்த இங்கிருக்கும் நாய்களைப் பற்றிய இன்னும் இரண்டு விஷயங்களை சொல்லியே ஆக வேண்டும்.
ஒன்று: இங்கிருக்கும் தெருக்களின் ஒவ்வொரு பத்து பதினைந்து மீட்டருக்கும் இரண்டு மூன்று நாய்கள் அவ்விடத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளும். வேறு எந்த நாய் அந்த எல்லைக்குள் நுழைந்தாலோ அல்லது அவ்வழியாக கடந்து சென்றாலோ அவ்வளவு தான். அவ்விடத்தை சொந்தமாக்கி கொண்ட நாய்கள் புதிதாக வந்த நாயை பாய்ந்து சென்று கடித்து குதறிவிடும். "தமிழ்நாட்டில் கூட நா இத பாத்திருக்கிறேனே", என்று சொல்வீர்களேயானால், அங்கே வெகு சில நேரங்களில் மட்டுமே இப்படி நடக்க கூடும். ஆனால் இங்கிருக்கும் நாய்கள் அவை வாழும் இடத்தின் வழியாக எப்போதுமே இன்னொரு நாய் செல்வதை அனுமதிக்காது. அப்படி புதிதாக அவ்வழியே கடக்க முயலும் நாயை அவை பாய்ந்து தாக்கும் தருணத்தில் நீங்கள் அந்த பக்கமாக போக நேர்ந்தால் அவ்வளவு தான்.. ஒரு சில கடிகள் உங்கள் மேலும் விழலாம்..
இரண்டு: நன்றியுணர்வு இல்லாத நாய்களை இங்கு தான் நான் பார்த்திருக்கிறேன். நா உண்மைய தாங்க சொல்றேன். நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட நாய்களை இங்கு நான் நிறைய பார்த்திருக்கிறேன். பொதுவாகவே தமிழ்நாட்டின் டீக்கடை ஓரங்களில் நின்றிருக்கும் நாய் ஒன்றிற்கு இரண்டு மூன்று நாள் ரொட்டி வாங்கிப் போட்டால் நாம் அந்த டீக்கடைக்கு செல்லும் எல்லா நேரங்களிலும் நம்மை எப்படியும் அடையாளம் கண்டுக் கொண்டு வாலாட்டியபடியே நம் பின்னால் வந்து நிற்குமல்லவா.. இங்கிருக்கும் பெரும்பாலான நாய்களுக்கு வாலாட்டுவதென்றால்.. ம்ஹூம்.. என்னவென்று கூட தெரியாது. எத்தனை நாள் நீங்கள் ரொட்டி வாங்கிப் போட்டாலும் கூட, நீங்கள் அதற்கு ரொட்டி வாங்கிப் போடுவது உங்கள் கடமை என்பதைப் போல ரொட்டியை தின்றுவிட்டு எனகென்னவென்று போய்விடும். "அதான் இத்தன நாள் பிஸ்கட் போட்டிருகோம்ல, நம்மள எங்க கடிக்கப் போகுது', என்று நினைத்துக் கொண்டு அவ்வழி செல்வீர்களேயானால், "தப்பு கணக்கு தப்பு கணக்குன்னு சொல்வாங்களே.. அதுக்கு பேரு இது தான் மாமு!!".. சும்மா பிரிச்சு மேஞ்சுடும்.. நன்றிகெட்ட நாய்களை நீங்கள் இங்கு தான் பார்க்க முடியும். "அதான் டெய்லி பாக்குறோமே", என்று சொல்லாதீர்கள். நான் சொல்வது நான்கு கால் நாய்களை..
அது ஏன் இங்கிருக்கும் மாநகராட்சி இதை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் இருக்கின்றதோ தெரியவில்லை. மறுபடியும் சொல்கிறேன்.. நான் இங்கு எழுதியிருப்பது விலங்கினங்களை சேர்ந்த நான்கு கால்களைக் கொண்ட நாய்களைப் பற்றி மட்டுமே!! வேறு எண்ணிக்கையிலான கால்களைக் கொண்ட வேறு இனங்களை சேர்ந்த சில பல உயிர்களுடன் இப்பதிவில் சொல்லப்பட்டிருக்கிற ஏதேனும் பொருந்துமென்றால் அது முழுக்க முழுக்க தற்செயலான பொருத்தமே தவிர வேறொன்றுமில்லை.
இரண்டு மூன்று முறை நானே மயிரிழையில் கடி வாங்காமல் தப்பித்து வந்திருக்கிறேன்.. அதனாலேயே ஊரடங்கியப் பின்பும் ஊர் விழிப்பதற்கு முன்பும் வீதியில் இறங்க நிறையவே பயமெனக்கு.. எனக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் பலருக்கும் தான்.
ReplyDeleteஅப்போ பெங்களுர் வரும்போது மனசுல பயத்தோடு தான் வரனுமா பால்
நான் பார்த்தவரையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான நாய்கள் சாதுவானவை.. சில நாய்களே அங்கு சீறிப் பாய்ந்துக் கடிக்கும் ரகத்தை சேர்ந்தவை. அங்கிருக்கும் பெரும்பாலான நாய்கள் குரைத்தாலும் கூட நாம் அதட்டினாலோ குனிந்து கல்லெடுத்தாலோ அவை அடங்கிப் போய்விடும்
ReplyDeleteதமிழ் நாட்டு நாய்க்கு இப்படி ஒரு தனிச்சிறப்பா!!!
//சக்தி said: தமிழ் நாட்டு நாய்க்கு இப்படி ஒரு தனிச்சிறப்பா!!!//
ReplyDeleteஹ ஹஹா.. ஆமாம் சக்தி.. என்ன தான் இருந்தாலும் அதுக நம்ம ஊரு நாய்களாச்சே.. நம்ம மேல பாசம் இருக்கும்ல..
ஒன்று: இங்கிருக்கும் தெருக்களின் ஒவ்வொரு பத்து பதினைந்து மீட்டருக்கும் இரண்டு மூன்று நாய்கள் அவ்விடத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளும். வேறு எந்த நாய் அந்த எல்லைக்குள் நுழைந்தாலோ அல்லது அவ்வழியாக கடந்து சென்றாலோ அவ்வளவு தான். அவ்விடத்தை சொந்தமாக்கி கொண்ட நாய்கள் புதிதாக வந்த நாயை பாய்ந்து சென்று கடித்து குதறிவிடும். "
ReplyDeleteபால் இது எல்லாம் சகஜம் தானே
எத்தனை நாள் நீங்கள் ரொட்டி வாங்கிப் போட்டாலும் கூட, நீங்கள் அதற்கு ரொட்டி வாங்கிப் போடுவது உங்கள் கடமை என்பதைப் போல ரொட்டியை தின்றுவிட்டு எனகென்னவென்று போய்விடும். "அதான் இத்தன நாள் பிஸ்கட் போட்டிருகோம்ல, நம்மள எங்க கடிக்கப் போகுது', என்று நினைத்துக் கொண்டு அவ்வழி செல்வீர்களேயானால், "தப்பு கணக்கு தப்பு கணக்குன்னு சொல்வாங்களே.. அதுக்கு பேரு இது தான் மாமு!!".. சும்மா பிரிச்சு மேஞ்சுடும்.. நன்றிகெட்ட நாய்களை நீங்கள் இங்கு தான் பார்க்க முடியும். "அதான் டெய்லி பாக்குறோமே", என்று சொல்லாதீர்கள். நான் சொல்வது நான்கு கால் நாய்களை..
ReplyDeleteஓய் பால் ஏதேனும் உள்குத்தோ!!!!
//சக்தி said: ஓய் பால் ஏதேனும் உள்குத்தோ!!!!//
ReplyDeleteஅட ஏம்மா கத்துற.. பப்ளிக்ல யாராச்சும் கேட்டுட போறாங்க.. நீ கத்தியே காட்டி குடுத்துடுவ போல இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்..
அப்போ உள்குத்து பதிவா இது அய்யோடா நான் தெரியாம கமெண்ட் போட்டுட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்.....
ReplyDelete//சக்தி said: அப்போ உள்குத்து பதிவா இது அய்யோடா நான் தெரியாம கமெண்ட் போட்டுட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்.....//
ReplyDeleteஹ ஹஹஹா.. நான் நகைச்சுவைக்காக அப்படியொரு பதில் கொடுத்தேங்க.. நீங்க போட்ட கமெண்ட்ஸ் மிகவும் சரியானவையே.. ஆனால் என் பதிவிலேயே அதுக்கு பதிலும் கொடுத்திருக்கேனே.. [ஹப்பாடா, எப்படியோ சமாளிச்சாச்சு ;)]