எதேச்சையாய் அல்ல. பார்க்க வேண்டும் என்று தான் பார்த்தேன். ஏனோ பிரகாஷ்ராஜ் ப்ரொடெக்ஷன்ஸ் மேல் எப்போதுமே ஒரு நம்பிக்கை உண்டு.
என்ன என்று சொல்வது இப்படத்தை பற்றி..? படத்தின் முதல் காட்சியில் உங்களுக்கு வாய் ஊறவில்லை என்றால் மிகவும் முக்கியமான ஒன்றை சிறுவயதில் அனுபவிக்காமல் கடந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். முதல் பாடலின் காட்சியமைப்பு எவ்வளவு அழகு என்றால், காட்சிகளின் மேலே போடப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர்களை படிக்க நீங்கள் மறந்திருப்பீர்கள். அவ்வளவு அழகான காட்சியமைப்பு.. வண்ணமயம்.. வாயூறும் சுவை..
நான் கிரகிக்க முடிந்தவரையில் படம் மூன்று தளங்களில் நகர்கின்றது. ஒரு தளம் வாய் ஊற வைக்கின்றது. இன்னொரு தளம் செய்வதறியாது உதவ இயலாத நிலையில் நம்மை தள்ளி விட்டு நிஜத்தின் கொடூர முகத்திற்கு நம்மை சாட்சிகள் ஆக்குகின்றது. கடைசி தளம் மிகவும் உணர்ச்சிமிக்க (sensitive) வாழ்வின் ஒரு பகுதியை நளினமிக்க கவிதை நடையில் காட்டுவதோடு மட்டும் நில்லாமல், தீர்வுகளை நாம் தான் தேடித் போக வேண்டும் என்னும் மிக முக்கிய யதார்த்தத்தை மென்மையான தென்றலின் தீண்டலுடன் சொல்லி விட்டு செல்கிறது.
படத்தின் பின் பகுதியை கொஞ்சமேனும் சுருக்கி இருக்கலாம் என்று எண்ணலாம் சிலர். எனக்கென்னவோ நான் குறிப்பிட்ட மூன்றாம் தளத்தின் உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதற்கு அது ஒருவகையில் தேவையான ஒன்றே என்று தோன்றியதால் அதன் நீளத்தை குறையென்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.
திரைப்படத்தின் காட்சியமைப்புகளில் தெளித்திருக்கும் வண்ணமயத்தில் நீங்கள் மயங்கி உங்களையே மறந்து ரசிக்காமல் இருக்க வாய்ப்பில்லை.
உன் சமையலறையில் ஒரு கலைஞனின் கலையுணர்வும் அதன் மீதான காதலும் எல்லையற்று பரந்து விரிந்து கிடக்கிறது. ஆங்காங்கே கதையின் போக்கில் சில நெருடல்களைத் தவிர குறையென்று சொல்வதற்கு வேறு எதுவுமே இல்லை.
உன் சமையலறையில்: எல்லாம் மிகவும் ருசியே.
பால் ஆரோக்கியம்.

No comments:
Post a Comment