Thursday, February 26, 2015

ஆன்மீகக் குறுங்கதைகள்: 2. மன(மும் மன்றாட்டு)ம்

"கிடைக்கவில்லை. "

"உண்மை தான். கிடைக்கும் என்பதும் உண்மையே."

"தாமதம் எதற்கு..?"

"சரி தான். தகுதியானதை உருவாக்கி தர நேரமாகலாம், நிஜமாகவே."

"தகுதியானது எதற்கு..? கேட்டது போதும்."

"நியாயம் தான். உன் மகிழ்ச்சி சரி, தருபவனுக்கு நிறைவு..?"

"மகிழ்கிறேன் என்னும் போது நிறைவடைவதில் என்ன குறை..?"

"கிடைக்கும் என்றான பின்பு கொஞ்சம் பொறுக்கலாம் அல்லவா..?"

"பொறுத்த பின் கிடைப்பதில் மகிழவில்லை என்றால்..? தருபவன் நிறைவு அடைந்திருப்பான், நான்..?"

"மகிழ்ச்சிக்காக அவசரத்தில் கொடுத்து, பின் உன் அழுகை காண நேர்ந்தால்..?"

"இப்போது மட்டும் என்ன..?"

"இரண்டும் வெவ்வேறு. இது நிரந்தரம் அற்ற ஒன்று."

"இப்போது இது அல்லாமல் பின்னால் வேறு எதற்கு..?"

புன்னகை, பின் மௌனம், "கோபமும் விரக்தியும் புரிகிறது. புரிதல் மெல்ல வரும்".

--
பால் ஆரோக்கியம் 

No comments:

Post a Comment