ஒரு கதை எழுதுவதற்கு நிஜமாகவே நிறைய பொறுமையும் மிதமிஞ்சிய கற்பனை சக்தியும் தேவைப்படுகின்றன. தலைப்பிட நேரமற்ற கதைகளும், தலைப்பை தாண்டி பயணிக்காத கதைகளும் என்று ஏகப்பட்டவை அலமாரியில் அமர்ந்து இருக்கின்றன.
இன்றைய மனநிலை ஏனோ ஆன்மீக கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறது. அல்லது கதைகளில் ஆன்மீகத்தை உணர்வதற்கு பிரியப்படுகிறது.
எல்லா கதைகளிலும் ஆன்மீகத்தை உணர முடியுமா என்னும் கேள்வியும் கூட இப்போது புதிதாய் பிறக்கிறது. ஆன்மிகம் சமயத்தை தன்னுள் விழுங்கி நிற்கிறது. அது சார்பின்மையுடன் எல்லாவற்றையும் இணைத்துப் பார்ப்பதால் சமயத்தின் வாய்க்குள் நுழைய சிரமப்படுகிறது. ஆன்மிகம், சமயம், சார்பு, அதன் இன்மை இன்னப்பிற என்று சிரமமான வார்த்தைகளில் கதை சொன்னால் யார் படிப்பார் என்னும் ஐயமும் கூட ஏற்படுகிறது. எளிய வார்த்தைகளில் (in simple words -- simple, crisp and engaging at the same time --), சாதாரண கதைகளில் (casual stories), சாதாரண நிகழ்வுகளின் விவரிப்புகளில் (write up of the casual happenings) ஆன்மீகத்தை அதன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா..? அல்லது உணர முடியுமா..?
சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் (ஏனோ முகநூல் என்று அழைப்பதில் இன்னமும் எனக்கு உடன்பாடில்லை -- பேஸ்புக்கே தன்னை முகநூல் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு விட்டப் பிறகும் கூட) ஒரு பதிவையும் அதன் மறுமொழிகளையும் படித்தேன். அதன் சாராம்சம்:
"The author says, 'the sky looked blue'. what does it really mean..?", என்று ஒருவன் கேள்வி எழுப்புகிறான்.
அதற்கான மறுமொழிகள் பல கோணங்களை தாங்கி நிற்கின்றன. உதாரணத்திற்கு சில:
இப்படியாக தொடரும் மறுமொழிகளில், ஒன்றாக வருகிறது பின்வரும் வரி:
இவ்வரி மிகவும் நுட்பமான ஒன்றை சொல்லாமல் சொல்லி விட்டு செல்கிறது. சில நேரங்களில் ஒன்றை அதுவாக மட்டுமே பார்ப்பதை விட்டுவிட்டு எதற்காக தேவையற்ற கேள்விகளிலும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும்..?
--
பால் ஆரோக்கியம்

- It means that the situation, in the context, has found it's peace.
- May be he is telling that the struggles and the sufferings (which could be symbolized to clouds) are clear and that the life is back to normal.
- The originality -- or nature -- of someone or something is finally found to be what it is.
இப்படியாக தொடரும் மறுமொழிகளில், ஒன்றாக வருகிறது பின்வரும் வரி:
- It just means that the sky is damn blue.
இவ்வரி மிகவும் நுட்பமான ஒன்றை சொல்லாமல் சொல்லி விட்டு செல்கிறது. சில நேரங்களில் ஒன்றை அதுவாக மட்டுமே பார்ப்பதை விட்டுவிட்டு எதற்காக தேவையற்ற கேள்விகளிலும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும்..?
--
பால் ஆரோக்கியம்
No comments:
Post a Comment