இது ஒரு புதிய தொடக்கம் அல்ல. இடையில் விட்டு சென்ற ஒன்றின் தொடர்ச்சி. சிமெண்ட் பூசப்பட்ட தரையின் அடியில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஒரு விதையிடம் காட்டும் பரிவு. சிறியதொன்று பெரிதாகும் என்னும் நம்பிக்கையில் தரையை உடைக்கும் முயற்சி அல்ல. விடாத ஒரு போராட்டத்திற்கு கொடுத்து தான் பார்ப்போமே என்னும் ஒரு சந்தர்ப்பம்.
மாறிக் கொண்டே இருக்கும் இவ்வுலகத்தில் கடைசி வரை கூட வரும் ஒரு துணைக்கான தேடல் எவ்வளவு அயர்வைத் தருகிறது. நான் நிறைய எழுதி இருக்கிறேன். நிறைய படித்திருக்கிறேன். நட்புகளை அடைந்திருக்கிறேன். நண்பர்களை இழந்திருக்கிறேன். ஏதோ ஒன்றின் வெறுமை இந்த உலகை கலங்கப்படுத்திக் கொண்டிருக்கும் மாசுவைப் போல எப்போதும் என்னை சுற்றி படர்ந்திருக்கிறது. அர்த்தங்களை தேடுவதிலும், அவற்றைக் கொடுப்பதிலும் ஏன் இவ்வளவு ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
என் எழுத்துக்களின் உருமாற்றங்கள் என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன. எங்கோ தொடங்கி, என்னை எங்கெங்கோ எடுத்து சென்றிருக்கின்றன. எவ்வளவு முகங்கள்.. எவ்வளவு அசைவுகள்.. சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் அவை எல்லாம் ஏன் ஓடி ஒளிந்துக் கொண்டன என்பது புரியவில்லை. ஒருவேளை அவை நிரப்ப முயன்ற வெற்றிடம் அக்கணத்திற்கு பிறகு வெற்றிடமாக இல்லாமல் போய்விட்டதோ..? அல்லது அதன் எதிர்பாராத வடிவப் பெருக்கம் என் எழுத்துக்களுக்கு அச்சத்தைக் கொடுத்து விட்டதோ..?
நான் என் யோசனைகளை பின்னோக்கிய திசையில் திரும்புகிறேன். என் வாழ்வின் மிகவும் உயிருள்ள பொழுதுகள் எழுத்துக்களின் துணையுடன் என் இருப்பிற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுதுகளாகவே இருந்திருக்கின்றன. எனக்கு தெரியும், அவை மிகவும் இனிமையான இதமான பொழுதுகள் அல்ல என்று. ஆனால் அவற்றில் நிறைய துடிப்பு இருந்ததாகவே இப்போது நினைக்கையில் எனக்கு தோன்றுகிறது.
நான் என் மேசை மீதிருக்கும் இந்த தாளைப் பார்க்கிறேன். இதில் எழுத்துக்கள் சிதறிக் கிடக்கின்றன. ஆங்காங்கே மை சிந்தியிருக்கிறது. இது பார்க்க தெளிவாக இல்லை. ஆனால் இது என்னை என் குழந்தைப் பருவத்திற்கு எடுத்து செல்கிறது. பேனாவின் மை தாளிற்கு மட்டுமே ஆனதல்ல என்பதை என் கைவிரல்கள், கன்னம் மற்றும் உதடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
--
பவுல்.

No comments:
Post a Comment