நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அதற்கு தேவையான அத்தனை வார்த்தைகளையும் முழுதாய் சேர்த்த பின்னும், அவற்றை சிக்கல்கள் இல்லாமல் கவனமாக கோர்த்த பின்னும் சொல்ல முடியாமல் தள்ளிப் போட வைக்கும் இச்சூழ்நிலைகளை என்ன செய்வது..?
ஒன்றை சொல்ல விரும்பும் ஒருவன் அதை முழுதாய் எவ்வித சமரசமுமின்றி வெளிப்படுத்த எவ்வளவு முயற்சிகள் எடுத்து கொள்கிறான். ஆனாலும் கூட சொல்ல வருவதை சென்று சேரும் இடத்தின் மனநிலைகளுக்கு ஏற்புடையவாறு எடுத்துரைப்பது எவ்வளவு கடினமான ஒன்றாக இருக்கிறது.
வார்த்தைகளின் உண்மைத்தன்மை வெளித் தெரியுமாறு அவற்றை நன்றாக செதுக்கி, அவற்றிற்கு மனநிலையின் வண்ணம் பூசி, அவற்றை வெளிப்படுத்தும் போது ஏற்படக் கூடிய (சாதகமான அல்லது எதிரான) எதிர்வினைகளை ஏற்கும் மனப்பக்குவத்தை உள்ளுக்குள் சுடர் விடச் செய்து, கடைசியில் சொல்ல விரும்பியதை சேதாரங்கள் இன்றி முழுவதுமாக வெளிப்படுத்தி முழுமையடைவது ஏன் இவ்வளவு தவிப்புகள் தாண்ட வேண்டிய ஒன்றாக இருக்கிறது..?
ஆடைகளை துறந்தவனுக்கு தன் மேல் படும் அல்லது படிந்து விடும் தூசுகளை துடைப்பதற்கு துணிகள் இருப்பதேயில்லை. அதற்கு துணிகள் தேவையில்லை என்பதையும் அவன் அறிந்தவனாகவே இருக்கிறான். அவன் மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பதெல்லாம் கருமேகங்கள் அவன் தலை மேல் குவிந்து தன் முடிச்சுகளை அவிழ்த்துக் கொள்ளும் அக்கணத்திற்காக தான்.
ஆடைகளை துறக்கும் ஒருவன் நன்றாகவே புரிந்து வைத்து இருக்கிறான், தன் மீது அறிந்தோ அறியாமலோ படிந்துவிடும் தூசுகளில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள தண்ணீர் எவ்வளவு உதவும் என்பதை. அதனாலேயே அவன் தான் தனித்திருக்கும் நேரங்களில் தண்ணீருடனான உறவாடலை விரும்பி ஏற்கிறான். அவன் தான் சொல்ல விரும்புவதற்கு தேவையான அத்தனை வார்த்தைகளையும் அத்தண்ணீரில் தான் வலை வீசிப் பிடிக்கிறான்.
--
பவுல்.

No comments:
Post a Comment