நாம் எவ்வளவு குழப்பங்களுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. மனிதன், மனிதன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள், கடவுள், கடவுளாக ஆக்கப்பட்ட கடவுள்கள். கோடுகளை யார் வரைந்தார்கள் என்பது முக்கியமற்ற ஒன்றாகவே தோன்றுகிறது. 'வரைந்தது' என்பதாக அது ஆகிவிடும் பொழுது, அங்கே திருத்தத்திற்கான இடம் அளிக்கப்பட்டு விடுகிறது.
மனிதன் என்பவன் யார் என்பதில் இருக்கும் ஒரு தெளிவான மனநிலை, கடவுளைப் பற்றியோ கடவுளாக ஆக்கப்பட்டு உள்ள கடவுள்கள் பற்றியோ இல்லை என்பதில் ஒரு தெளிவு இருக்கவே செய்கிறது. அதற்கு காரணம் வளர்க்கப்பட்ட விதத்தினால் உள்ளுக்குள் ஏற்பட்டு இருக்கும் மீற பயப்படும் வரம்புகள்.
மனிதம் சார்ந்த குணாதிசயங்கள் உயரிய பண்புகளாக பாராட்டப்படுவதும், அதை மனம் எதிர்பார்ப்பதும் எவ்வளவு வேடிக்கையான வருந்தத்தக்க ஒன்று. நான் என் தோழி ஒருவரிடம் அடிக்கடி சொல்வதுண்டு, "உங்களைப் போல புரிதல் உள்ளவரை நான் இதுவரையில் பார்த்ததில்லை.. ஒரு நிகழ்வு அல்லது செயல் உங்களுக்கு முற்றிலுமே எதிராக இருக்கும் போதும் கூட எதிராளியின் கண்களின் வழியாக அந்த நிகழ்வை, செயலை பார்க்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி எவ்வளவு பாராட்டுதல்களுக்கு உரியது..?", என்பேன். அவர் சிரித்துக் கொண்டே சொல்வார், "அப்படி பாராட்டும் அளவிற்கு அதை உயர்வாக பேச என்ன இருக்கிறது.. நியதியின் படி அப்படி தானே நாம் இருக்க வேண்டும்", என்பார். உதவும் பாங்குடைய ஒரு மனிதரை, இரக்கம் காட்டும் ஒரு மனிதரை, "நீங்கள் எவ்வளவு உயர்ந்தவராக இருக்கிறீர்கள்", என்று புகழும் அளவிற்கு இருக்கும் சூழ்நிலைகள் நிஜமாகவே வருத்தத்திற்கு உரிய ஒன்று தான். மனிதம் என்பதின் அடிப்படை குணாதிசயங்கள் காண்பதற்கு அல்லது அனுபவிப்பதற்கு அரிதாகி விட்ட சூழல் ஆரோக்கியமான ஒன்றா..? இந்த ஒரு அடிப்படை புரிதல் போதும், 'மனிதன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்' பற்றி என்ன சொல்ல வருகிறேன் என்பதை அறிந்து கொள்ள.
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவனா என்பதில் எனக்கே நிறைய சந்தேகங்கள் உண்டு. ஆனால் கடவுளாக ஆக்கப்பட்ட கடவுள்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்கிற தெளிவு நிறையவே உண்டு. நான் பொதுவாகவே சொல்வது, "I'm spiritual, not religious", என்பதை தான். எனக்குள் ஒரு தெளிவு பெரும் வரை, I should give the benefit of doubt to God. இன்னமும் அறிவியலின் எல்லைகளுக்குள் அடைக்க முடியாத பல விஷயங்கள் இருக்கும் போது, கடவுளை விட்டு விலகினால் துரதிஷ்டம் துரத்தும் என்னும் மிகவும் கொடிய விஷயம் பிஞ்சிலேயே நம் நெஞ்சுக்குள் செலுத்தப்பட்டு ஒரு ஆழ்ந்த பயத்தை உருவாக்கி வைத்திருக்கும் சூழலில் நாம் வளர்ந்து இருக்கும் போது, giving the benefit of doubt to God is a much more comfortable and less complicated choice that one can choose என்று தான் எனக்கு இப்போது வரையில் தோன்றுகிறது. பின்னர் இது மாறலாம். அது மாறும் போது பார்த்துக் கொள்ளுவோம்.
கடவுள் நம்பிக்கையின் மீதான தெளிவு இந்த அளவில் இருக்க, 'இவர் தான் கடவுள்' என்பதில் கொஞ்சமும் உடன்பாடற்ற தெளிவு இருக்கவே செய்கிறது. இக்குறுகிய வட்டம் நிறைய வன்முறைகளை தூண்டுகிறது, மனிதர்களைப் பிரிக்கிறது, மனிதத்தை சிதைக்கிறது, மனதின் மீது சிவந்த கொடிய நஞ்சைக் பூசுகிறது, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 'இவர் தான் கடவுள்', என்பது ஒரு வியாபாரம், அரசியல், சூழ்ச்சி, பிணியுள்ள மனம் தான் வாழும் சமூகத்தினுள் பரப்பும் வியாதி, ஒருவன் மனிதத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள தனக்கு தானே அல்லது பிறரிடம் கொடுக்கும் Excuse.
--
பவுல்.

No comments:
Post a Comment