
பூக்களுக்கு தெரிவதில்லை மாலையில் அவை உதிர்ந்து விடுமென்று.. அதனால் தானோ என்னவோ அவை பளிசென்ற புன்னகையுடன் அழகை வெளிப்படுத்துவதிலும், காற்றின் இசைக்கு நடனமாடுவதிலும், தன்னை சூழ்ந்திருக்கும் காற்றிற்கு மணம் சேர்ப்பதிலும் எந்த குறையும் வைப்பதில்லை... பனித்துளிகளைத் தாங்குவது முதல் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தேனூட்டுவது வரை எல்லாவற்றையும் ஒரு புன்சிரிப்புடன் செய்கின்றன..
மாலையில் மடிவதற்குள் முடிந்தவரை பலரின் முகங்களில் புன்னகையையும், பூரிப்பையும் ஏற்படுத்தி, பலரின் வாழ்வை புத்துணர்வூட்டி, சாவதற்கு முன் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்தே மடிகின்றன..
ஒருவேளை, அவை அடுத்த நாள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதாலேயோ என்னவோ அவை இருக்கும் ஒரு நாளை வாழ்ந்து பார்த்துவிடுகின்றன..
எவ்வளவோ நாட்கள், நாமும் ஏன் அப்படி வாழ முடிவதில்லை என்று வானம் பார்த்து நிலவொளியில் யோசித்ததுண்டு.. அப்படி வாழ நான் இதுவரை எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறமுடியவில்லை... ஆனாலும் எனது முயற்சிகள் என்னவோ அடுத்தடுத்து செடிகளில் பூக்கும் மலர்களை போல தொடர தான் செய்கின்றன..
அடிக்கு பயந்து சொல்லவில்லை.
ReplyDeleteநிஜமாகவே நல்லாயிருக்கு.வாழ்த்துக்க்கள்
svramani08,
ReplyDeleteஹ ஹஹா.. :) ரொம்ப நன்றீங்க..!! :)