என்ன தான் அன்பு இருந்தாலும், பணம் அப்படினு வந்துட்டா ஆள மாத்திடுமோ..? அதுக்காக எல்லாரும் அப்படினு நான் சொல்ல வரல... கண்டிப்பா எல்லாரும் அப்படி கிடையாது.. அதுக்கு என்னோட சில நண்பர்கள் எதார்த்த உதாரணங்கள்.. ஆனா அதே சமயத்திலே, சிலரிடம் சில வித்தியாசங்களை கண்டிப்பா உணர முடியுது, பணம் அவங்க கிட்ட கொஞ்சம் நெறையா வந்ததுக்கு அப்புறம்!!
பணம் பத்தும் செய்யும் என்று சொல்வதென்னவோ உண்மை தான்.. ஆனா அதுக்காக பாசத்தை கொலை செய்யவுமா அனுமதிக்கணும்? வாழ்க்கையிலே என்ன தான் எல்லாத்தையும் பணத்தை வச்சு வாங்கலாம் அப்படினாலும், வாங்க முடியாத சில விஷயங்கள் இன்னும் இருக்க தான் செய்கின்றன.. என்ன அவை உணர்வு சம்பந்தப்பட்டவை.. பொருள் மற்றும் பண மோகத்திலே இருக்கிறவங்களுக்கு அதெல்லாம் எங்க புரிய போகுது..
படுக்க மெத்தை வாங்கலாம் ஆனா தூக்கத்தை வாங்க முடியாது (உடனே 'தூக்க மாத்திரை வாங்கலாம்' அப்படினு மொக்க நகைசுவை அடிக்காதீங்க)... அது மாதிரி தான்.. பணத்தை வச்சு எந்த பொருளை வேண்டுமானாலும் வாங்கலாம்.. ஆனா உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களை பணத்தை வச்சு வாங்க முடியாது.. அதனால மற்றவங்க உணர்வுகளை மதியுங்கள்.. மதிக்கவில்லை என்றாலும் மிதிக்காமல் இருக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள்.. பட்டும் படாம சொல்லணும் அப்படினு தான் ரொம்ப மேலோட்டமா சொல்லி இருக்கேன்..
வேற என்ன.. அறிவுரை அவ்வளவு தான் :-)
//பட்டும் படாம சொல்லணும் அப்படினு தான் ரொம்ப மேலோட்டமா சொல்லி இருக்கேன்.. /
ReplyDeleteநல்ல அறிவுரைகளை அழுத்தமாகவே சொல்லலாமே?பட்டும் படாம ஏன் சொல்லணும்???
யார் மனசும் புண்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் பட்டும் படாமல் சொல்லவேண்டும் என்று தோன்றியது.. பதிவுகள் மனமாற்றத்தை ஏற்படுத்தலாம் ஆனால் மன வருத்தத்தை ஏற்படுத்தி விடக்கூடாது அல்லவா :-)
ReplyDelete