வேகமாக துவைத்துக் காயப் போடப்படும் துணிமணிகள்.. மாடியின் விளிம்பில் தலைக் காட்டும் மெத்தை விரிப்புகள்.. வெயில் உரசிச்செல்ல விரிப்புகளில் கொட்டப்பட்டிருக்கும் தானியங்களென்று பல வாரங்களுக்கு பின் தலைக் காட்டும் சூரியனை எல்லோரும் மகிழ்ச்சியாகவே வரவேற்கின்றனர்..
தொடர்ந்து பல வாரங்கள் பெய்த மழையின் சாயல் மெலிதாக காணாமல் போய்க் கொண்டிருகின்றது. இலைகளிலும் மலர்களிலும் படர்ந்திருக்கும் மழைத்துளிகள் மெல்ல மறைந்த வண்ணம் உள்ளன.. குழந்தைகள் வெகு உற்சாகத்துடன் தெருக்களில் விளையாட தொடங்கிவிட்டனர்..
இதே சூரியன் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து தலைக் காட்டிய போது 'பயங்கர வெயில்' என்று அலுத்துக் கொண்ட அதே மக்கள் தான் இன்று மழைக் காலத்தில் திடீரென்று தலைக் காட்டும் போது குதூகலிப்புடன் வரவேற்கின்றனர். கோடைக் காலத்தில் திடீரென்று பெய்யும் மழையை ஆர்வமுடன் ஏற்றுக் கொள்ளும் மனமோ மழைக் காலத்தில் தொடர்ந்து பெய்யும் போது அதன் மேல் உற்சாகம் இழக்கின்றது. எப்போது வெயிலடிக்குமென்று ஏங்கவும் ஆரம்பித்து விடுகின்றது.
கூடவே இருக்கும் உறவுகளை சில நேரங்களில் பெரிதாக கண்டுக் கொள்ளாத மனம், அவர்களைப் பல நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் பிரிந்து பின் மீண்டும் சந்திக்கும் போது குதூகலிக்கின்றது. சில நாட்களுக்கு முன்பு அருமையானதொரு மேற்கோள் படித்தேன்.
" சில நேரங்களில் ஒரு சிறிய பிரிவின் மூலமாக உங்கள் மதிப்பை மற்றவர்களை உணர வைப்பது சரி தான். அதே சமயம் மற்றவர் நீங்களில்லாமல் வாழக் கற்றுக் கொள்ளுமளவிற்கு அது நீண்ட பிரிவாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.."
ஒரு விதத்தில் அது உண்மையும் கூட. எப்போதும் கூடவே இருக்கும் போது சில நேரங்களில் நெருங்கிய உறவுகளின் மதிப்பை நாம் உணர தவறி விடுகிறோம். ஒரு சிறிய பிரிவோ அல்லது இடைவெளியோ ஏற்படும் போது தான் அத்தகைய மனிதர்களின் முக்கியத்துவத்தையும் அவர்களின் மதிப்பையும் நாம் உணர்கிறோம். ஒரு முறை மனம் அதை உணர்ந்து விட்டால் வாழ்நாள் முழுதும் அந்த உறவை கொண்டாடி மகிழும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் மனதிற்கு இப்போது அது எத்தகைய அற்புதமான உறவென்பதும் அதன் முக்கியத்துவமும் புரிந்திருக்கும்.
அதே சமயம் இடைவெளியோ அல்லது பிரிவோ அதிகமாகும் போது, சோகத்தால் வாடும் மனமானது நாளடைவில் பிரிந்த அந்த உறவில்லாமல் வாழப் பழகிக் கொள்கின்றது. காலத்தின் மாயாஜாலமது. பிரிவின் கால அளவு மிக நீண்டதாகிவிட்டால், மீண்டும் சந்திக்கும் போது சில நேரங்களில் பழைய நெருக்கமான உணர்வு காணாமல் போய் ஒரு அந்நிய உணர்வு வரவும் வாய்ப்புகள் அதிகம். மீண்டும் அந்த இதயம் தொட்ட நெருக்கம் வருவது சில நேரங்களில் கடினம். எனவே எப்போதும் பிரிவென்பது நீண்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இடைவெளி விழும் நேரங்களில் மீண்டும் உறவுகளை இணைத்துக் கொள்ள எப்போதும் முனைப்பாக இருங்கள்.
எங்கோ ஆரம்பித்து, எதுவோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக் கொண்டிருக்கின்றேன். ஆனால் என்ன சொல்ல வருகிறேனென்று உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கின்றேன்!! நான் தமிழாக்கப்படுத்திய அந்த மேற்கோள் இது தான்..
"Let people miss you to realize your worth, but don't let them miss you enough so that they can learn to live without you.."
குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)
I agree this,
ReplyDeleteWhile in colleage you will think how can you leave your friends and persuade alone for work ?
Later,after 6 months, you will NOT even send them an email.
Same with family relationship as well, within 2 years of my work life in Bangalore, I visited more than 10 times to tiruchendur,
but, last 2 years I visited only once...
Time is a GOOD medicine and also a mesmeraiser,it will take you in its hand and make you to dance according to its rhythem,its beautiful.
nice point you made here.Your flow of thoughts are smooth and its following my instincts.
P.S I'm leaving my first comment Paul... I'll try to add in tamil for future ones.
Thanks for ur comments karthi :)
ReplyDelete