நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தினூடே கைகளின் உதவி கொண்டு, கிடைத்த ஒரு சான் இடைவெளியில் உடம்பைத் திணித்து மெல்ல ரெயில் நிலையத்திற்குள் முன்னேறினேன்.. பெரும்பாலும் இந்த முன்னிரவு நேரங்களில் ரெயில் நிலையம் மக்கள் வெள்ளத்தில் மிதப்பதென்பது ஒன்றும் அதிசயமான விசயமில்லை. பழகிப் போனதாலோ என்னவோ கூட்டம் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நான் செல்ல வேண்டிய ரெயில் நிற்கும் நடைமேடைக்கு வந்து சேர்ந்தேன். அன்றென்னவோ அதிசயமாக எனக்கு முன்பே ரெயில் வந்து நின்றுக் கொண்டிருந்தது.
எனக்கு படுக்கை ஒதுக்கப்பட்டிருந்த பெட்டியைத் தேடி முன்னோக்கி நகர்ந்தேன். தேனீர் மற்றும் உணவு பொட்டலங்களை விற்கும் வியாபாரிகள் சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடியோடி வியாபாரத்தில் கவனம் செலுத்தி கொண்டிருந்தனர். 'விடை பெற போகிறோமே' என்று லேசான சோகம் அப்பிய முகங்கள்.. ரெயிலை பிடிக்க ஓடோடி வந்ததால் மூச்சு வாங்கி கொண்டு வியர்த்து வழியும் முகங்கள்.. ஊர் பிரயாணம் செய்யப் போவதால் மனதிற்குள் படர்ந்திருக்கும் குதூகலத்தை வெளிப்படுத்தும் பிரகாசமான கண்கள்.. அலைந்து திரிந்து கலைத்து போன முகங்கள்.. இப்படியாக வெவ்வேறான உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களில் காண முடியும்.
பலரின் இயக்கங்கள் வேகம் கலந்த சுறுசுறுப்புடன் இருக்க, ஒரு சிலரோ சுவாசம் போல் வாழ்க்கையோடு ஒன்றி போய்விட்ட பிரயாணமென்பதாலோ என்னவோ எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் உள்ளுணர்வின் உந்துதலுக்கு கட்டுப்பட்டு இயந்திரங்களை போன்று நடந்து சென்று கொண்டிருந்தனர்.
எனக்கு முன்பதிவில் ஒதுக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டி வந்ததும், அதனுள் நுழைந்து எனது படுக்கை எண் என்கிருகிறதென்று கண்களால் தேடிக் கொண்டே முன்னேறினேன். எனக்கான படுக்கை வந்ததும், அதுதானாவென்று மீண்டும் ஒரு முறை சந்தேகப்படும் படியாக ஏற்கனவே பலர் அமர்ந்திருந்தனர்.
அங்கிருந்தவர்களில் தனது ஐம்பதுகளிலிருந்த அந்த பெண்மணி என் முகம் பார்த்து புன்னகையோடு, "உங்களோட சீட்டுங்கலா(seat) தம்பி" என்றார். நான் பதிலுக்கு புன்னகைத்து 'ஆம்' என்பது போல் தலையசைத்தேன்.
"என் பையன ஏந்தி விட வந்திருக்கோம், ட்ரெயின் கெளம்புரதுக்குள்ள நாங்க ஏறங்கிடுவோம்.. கொஞ்சம் பொறுத்துக்கோங்க தம்பி..", என்றார். சொல்லும் போது எழுத்துக்களில் விவரிக்க முடியாததொரு சிநேகம் கலந்த பாவனைகளை அவர் முகம் வெளிப்படுத்தியது. நான் எனது புன்னகையை பெரிதாக்கி, "இட்ஸ் ஓகே.. நோ ப்ராப்ளம்ஸ்.." என்றேன். 'அட இங்க பாருடா.. துரை இங்கிலீஷ் பேசறாரு..' என்று என்னை நானே மனதிற்குள் கிண்டல் செய்து கொண்டேன். தேவை இல்லாத நேரங்களில் ஆங்கிலம் பேசுவதை முடிந்த வரை தவிர்க்க முயல்பவன் நான். ஆனாலும் என்னையுமறியாமல் சில நேரங்களில் ஆங்கிலம் என் நாவில் வந்து விடுவதுண்டு.
பையனென்று அவர் கூறிய அந்த இளைஞனுக்கு இருபத்தியிரண்டு வயதிருக்கும். சீவப்பட்டிருந்த தலைமுடி முன்புறம் லேசாக கலைந்திருந்தது. அந்த பெண்மணியோடு மேலும் மூன்று பெண்கள் அமர்ந்திருக்க, ஜன்னல் ஓரத்தில் வெளியில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தவர் அவனது அப்பாவாக இருந்திருக்க வேண்டும். அவ்வபோது மௌனம் நிலவினாலும் அந்த பெண்களின் பெரும்பாலான வார்த்தைகள், 'ஒழுங்கா சாப்பிடு.. போறப்ப வர்றப்ப கவனமா இரு.. யார்டயும் சண்டை போட்டுகிட்டு இருக்காத.. அப்பப்போ போன் பண்ணு..' என்பதாகவே இருந்தது. அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் அக்கறை, பாசம், அன்பு என்று எல்லா உணர்வுகளும் நிரம்பி வழிந்தன. அவர்கள் சொல்வதற்கெல்லாம் அவன் தலையாட்டிக் கொண்டிருந்தாலும், சுற்றி இருப்போர் கவனம் அவ்வப்போது அவனை நோக்கி இருந்ததால் அவன் முகத்தில் கொஞ்சம் அசௌகர்யம் தென்பட்டது.
அந்த காட்சியை பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது அது ஒரு நடுத்தர வர்க்க குடும்பமென்றும், அந்த இளைஞன் தான் அந்த குடும்பத்தின் ஒரே நம்பிக்கையென்றும். முதல் முறையாக வேலைக்காக வெளியூர் போகிறான் என்பதையும் என்னால் சரியாக யூகிக்க முடிந்தது. இப்படித்தான் பல குடும்பங்கள் இன்று கையில் கிடைக்கும் ஒரே நம்பிக்கை கயிறு பற்றி எப்படியாவது மேலெழுந்து வந்துவிடலாமென்று அவர்களாலான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று தானே எனது பயணமும் தொடங்கியது. அன்று பயணித்த ரெயில் சில மணி நேரங்களில் தனது இலக்கை அடைந்து நின்றுவிட்டாலும், கடமைகளை நிறைவேற்ற நான் கொண்ட பயணமோ ஐந்தாண்டுகளாகியும் இன்னும் தொடர்ந்து கொண்டேதானிருகின்றது. ஆனால் அலுப்பொன்றும் தோன்றவில்லை இதுவரை. ஒருவேளை பிறப்பின் காரணமறிந்ததாலோ என்னவோ எனது வாழ்வின் பயணம் எப்போதும் என்னை மகிழ்ச்சியிலேயே ஆழ்த்தி வருகின்றது..
அந்த பெண்கள் தான் நிறைய பேசிக் கொண்டிருந்தனர். அவனது தந்தையோ அமைதியாக ஜன்னல் வழியே அவனது ஒரு கரத்தின் மேல் தனது கரத்தை வைத்து நின்றுக் கொண்டிருந்தார். பெண்கள் எப்போதும் அன்பையும் பாசத்தையும் எளிதாக வெளிப்படுத்தி விடுகின்றனர். ஆண்கள் காட்டும் பாசமோ மலர்களுடன் கொஞ்சும் காற்றைப் போன்றது. அவ்வளவாக அது வெளியில் தெரிவதில்லையென்றாலும் எப்போதும் அந்த கொஞ்சலும் உறவாடலும் இருந்துக் கொண்டேதானிருக்கும். வெகு சில நேரங்களிலேயே மலர்கள் லேசாக அசைந்து காற்றிருப்பதை காட்டிக் கொடுக்கின்றன. என்னவோ தெரியவில்லை, சிறுவயதிலேயே இறந்து விட்ட என் தந்தையின் ஞாபகங்கள் திடீரென்று சில கணங்கள் என் இதயம் தொட்டு சென்றன. மையினால் எழுதப்படாமலேயே சில கவிதைகள் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தன.
ரெயில் புறப்பட தயாராக, அந்த பெண்கள் கீழே இறங்கி ஜன்னலருகில் நின்றுக் கொண்டனர். ரெயில் மெதுவாக நகர ஆரம்பிக்க, கையசைத்து விடை கொடுத்தவண்ணம் கூடவே சிறிது தூரம் நடந்து வந்தனர். ரெயிலின் வேகம் மெதுவாக அதிகரிக்க, பிடி தளர்த்தியிருந்த அவன் தந்தையின் கரம் மீண்டும் அவன் கரங்களை அழுத்தமாக பற்றி, 'பாத்து பத்தரமா இருப்பா..' என்று அவன் காதுகளில் மெதுவாக சொல்லி விடை பெற, அவன் தனது கையைப் பார்த்தான். கசங்கிய நூறு ரூபாய் தாளொன்று அவன் உள்ளங்கையில் இருந்தது. அவனையுமறியாமல் அவன் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் மட்டுமல்ல.. உள்ளுக்குள் நானும் தான்.
ரெயில் வேகமாக முன்னோக்கி நகர, என் நினைவுகளோ பின்னோக்கி நழுவத் தொடங்கியிருந்தன.
குறிப்பு: படித்து விட்டு சும்மா போகாதீங்க. உங்கள் கருத்துகளை எழுதிவிட்டு போங்க!! :-)

///அன்று பயணித்த ரெயில் சில மணி நேரங்களில் தனது இலக்கை அடைந்து நின்றுவிட்டாலும், கடமைகளை நிறைவேற்ற நான் கொண்ட பயணமோ ஐந்தாண்டுகளாகியும் இன்னும் தொடர்ந்து கொண்டேதானிருகின்றது///
ReplyDeleteபலர் வாழ்கையில் பயணங்கள் நீளத்தான் செய்கின்றன
உங்கள் கருத்துக்கு நன்றி சதிஷ்!!
ReplyDelete