என்னிக்கும் போல தாங்க அன்னிக்கும் எதார்த்தமா போனேன். முடி வெட்டி ரொம்ப நாளாச்சே.. பசங்க வேற, 'இன்னும் கொஞ்சம் பெரிசா வளத்து, முதுமலை காடுனு போர்டு எழுதி போடு.. நல்லா இருக்கும்!!'னு கிண்டல் பண்றாங்களே, அதனால முடி வெட்டிட்டு வரலாம்னு எப்பவும் முடிவெட்டுற கடைக்குள்ள நொளஞ்சேன்.
இப்ப கொஞ்ச மாசமா என் தலைய கதிர் அறுத்து அழகாக்குறது அந்த பதினஞ்சு வயசு பய தான். பாக்க நண்டு மாதிரி இருந்தாலும், தொழில்ல ஜித்தன்னு சொல்லலாம். நா எப்டி வெட்டுன்னு சொல்றேனோ அதே மாதிரி வெட்டி விடுவான்.
ஆனா அன்னிக்குனு பாத்து, அந்த பய இன்னொருத்தன் தலைய மேஞ்சுகிட்டு இருந்தான். கடையோட ஓனர் கொஞ்சம் பெரிய ஆள் தான். அன்னிக்கு அவர் கை பற பறன்னு இருந்திருக்கும் போல.. 'வாங்க சார்.. இங்க வந்து உட்காருங்க..'னு அவர் பக்கத்திலே இருந்த சேர்-ஐ காமிச்சாரு.
"சரி.. இந்த ஆபிசர் நல்லா எக்ஸ்பீரியென்ஸ்டு மாதிரி தெரியுது. வாண்டே நல்லா வெட்டினா தல எப்டி வெட்டி விடும்"னு நம்ம்ம்ம்ம்பி (அந்த 'ம்'-அ கொஞ்சம் அழுத்தி மெல்லமா படிங்க.. அதுக்காக தான் அத்தன 'ம்ம்ம்ம்' போட்டிருக்கேன்) போய் உட்காந்தேன்.
மெல்லமா தண்ணிய தெளிச்சு, ஒரு சின்ன மசாஜோட ஆரம்பிச்சாரு. ஆரம்பம் நல்லா இருக்கவும், கொஞ்சம் கண்ணசந்துட்டேங்க. அது தப்பா.. அப்டியே தப்புனாலும் என் தலைல ரெண்டு தட்டு தட்டி எழுப்பி விட்டுருகலாம்ல அந்தாளு. அத விட்டுட்டு தலைய இப்படியா கொதறி வெப்பாரு..
ஏதோ பத்து மாசம் சாப்பிடாம பசில இருந்த மாடு, வயல்ல இருக்குற புல்லெல்லாத்தையும் மேஞ்சிட்டு, "இன்னும் பசிக்குது.. ம்ம்ம்மே.."னு கத்துற மாதிரி, தலைல இருந்த முடி எல்லாத்தையும் ஓட்ட வெட்டிட்டு, "என்னங்க உங்கள்ட முடி அவ்ளோ தானா..?"னு கேக்குற மாதிரி கத்தரிக்கோல என் மூஞ்சி முன்னாடி ஆட்டினப்போ தான் கண்ண தொறந்தேன்.. சினிமால வடிவேலு சொல்ற மாதிரி, "நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.."
"ஏண்டா டேய்.. முடி தானடா வெட்ட சொன்னேன் உன்ன.. மொட்டையா அடிக்க சொன்னேன்.. ஆரம்பிசப்ப நல்லா தானடா ஆரம்பிச்ச.. ஏன் இந்த கொல வெறி.. 'ஐயா எனக்கு நெறைய முடி வெட்டனும்னு ஆசையா இருக்கு'னு சொல்லிருந்தினா, பக்கத்துக்கு வீட்ல கட்டிப் போட்ருக்க செம்மறி ஆட்ட கொண்டு வந்து விட்டுருப்பேன்ல.. என் தல தான் உனக்கு கெடச்சதா.. போடாங்ங்ங்ங்க.."னு அந்தாளு மூஞ்சில ஓங்கி ஒரு குத்து விடனும் போல இருந்துச்சு..
"இன்னும் ஏன்டா கத்திய மூஞ்சி முன்னாடி ஆட்டிட்டு இருக்க. முடிய மொட்டயடிச்சது பத்தாதா? என் மூக்கையும் வெட்டனுமா? கத்திய அந்த பக்கம் எடுடா.."னு அந்தாள தள்ளிட்டு எந்திரிச்சு, "ஐயோ.. இருந்த நாலு முடியையும் நாலு இன்ச் கூட இல்லாம வெட்டிடானே"னு வயிதெரிச்சலோட, "இந்தா புடி காசு.. தூக்க மாத்திரைய வாங்கி போட்டுகிட்டு நல்லா போய் தூங்கு.. இப்டி மத்தவங்க தலையோட வெளாடாத.."னு அவன சபிசிட்டே வெளிய வந்தேன்..
அடுத்த நாள் ஆபீஸ் போனப்ப, மத்தவங்க எத கேக்க கூடாதுன்னு நெனச்சேனோ அத என் கூட வொர்க் பண்ற என் ப்ரண்ட் என்னை பாத்ததும் சிரிசிட்டே கேட்டா, "என்ன பால்.. உரிச்ச கோழியா வந்து நிக்குற.."
"சிங்கத்த உரு தெரியாம செதசிட்டதால, உனக்கு சிரிக்க தைரியம் வந்துடுச்சுல.."னு ஆதங்கத்தோட, "இனிமே முடி வெட்ட போறப்ப தூங்குவியா.. தூங்குவியா.. தூங்குவியா.."னு என்ன பாத்து நானே கேட்டுகிட்டேன்..
"சரி விடுடா பால்.. முடி தான.. இன்னும் ஒரு மாசத்திலே வளந்திட போகுது.. இதுக்கு ஏன் கவலை பட்டுகிட்டு.."னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிகிட்டாலும் உள்ளுக்குள்ள, "இருந்தாலும் உன் தலைல வெளயாடிட்டானே அந்த எரும.."னு ஒரு கோபம் இருந்திட்டு தான் இருக்கு..
உங்கள் எழுத்துநடை மிகவும் எதார்த்தமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.
ReplyDelete//ஏதோ பாத்து மாசம் சாப்பிடாம பசில இருந்த மாடு, வயல்ல இருக்குற புல்லெல்லாத்தையும் மேஞ்சிட்டு, "இன்னும் பசிக்குது.. ம்ம்ம்மே.."னு கத்துற மாதிரி//
மிகவும் தெளிவான எடுத்துக்காட்டு... இதைப்படிக்கும்போது மாடு கத்துவது என் கண்முன் தோன்றியது.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிங்க இளங்குமரன்.. :)
ReplyDelete