Tuesday, July 6, 2010

சிதறல்..

எவ்வளவோ எழுதுவதற்கு இருந்தும், தொடர்ந்து பதிவுகளை எழுத முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமான காரணம், இப்போதெல்லாம் மனது அவ்வளவு அமைதியாக இல்லை. ஏதாவதொன்றை பற்றிய சிந்தனையும் கவலையும் எப்போதும் மனதிற்குள் எழுந்த வண்ணம் உள்ளன. மனம் தெளிவாக இல்லாத சூழ்நிலைகளில், எழுதுவதற்கு எவ்வளவு தான் முயன்றாலும் அது முடிவதே இல்லை.

மனம் சரியில்லை. அதனால் எல்லாமுமே சரியில்லாத மாதிரியான தோற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனாலேயே ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் தடைபடுகின்றன. எத்தனையோ கருக்களை எழுதுவதற்கு யோசித்தாலும், எழுத முயற்சி எடுக்க முடியவில்லை. இது எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.

ஒருவிதத்தில் அதிகம் எழுத தோன்றாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், 'யார் இதையெல்லாம் படிக்கிறார்கள்' என்பதான ஒரு எண்ணமும் கூட. எத்தனையோ நாட்கள் இந்த ப்ளாகை (blog) நிறுத்தி விடலாம் என்று நினைத்ததுண்டு. எல்லாவற்றையும் அழிப்பதற்கு 'டெலிட்' (delete) பொத்தானை அழுத்த போயிருக்கிறேன். சொல்லத் தெரியாத ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த முடிவை இதுவரையில் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். எவ்வளவு நாட்கள் தான் இந்த கட்டுப்பாடு இருக்கிறதென்று பார்க்கலாம்..

2 comments:

  1. ஏன் என்ன ஆயிற்று.? எதற்கும் கவலைப் படாதீர்கள்.. விரைவில் அனைத்தும் சீராகிவிடும்.. யாரும் படிபதில்லை என்று ஏன் நினைக்கிறீர்கள். . நாங்கள் இல்லையா..?

    ReplyDelete
  2. தயவு செய்து அழிக்கும் எண்ணம் வேண்டாம்.முடிந்தவரை எழுதுங்கள்

    ReplyDelete