401 காதல் கவிதைகள் என்னும் குறுந்தொகை பற்றிய தனது எளிய அறிமுகத்தில் சுஜாதாவின் முன்னுரை நம் இலக்கியங்களைப் பற்றிய பல பரிமாணங்களைத் தாங்கியதாக உள்ளது. பள்ளிக் காலங்களில் மனனம் (மட்டுமே) செய்த 'எட்டுத்தொகை பத்துப்பாட்டுடன் பதினெண்கீழ்க்கணக்கு'கள் சிந்தையில் வந்து போகின்றன. ஏன் பள்ளிகளில் தமிழை ஆர்வமிக்கதாய் போதிக்கும் ஆசிரியர்கள் வாய்க்கப் பெறவில்லை என்னும் குறை மீண்டும் நிழலாடுகிறது.
புத்தகங்களை மதிப்பெண்கள் அடிப்படையில் அணுக வைக்கும், அல்லது போதிக்கும், ஆசிரியர்களுக்கு மத்தியில் அறிவிற்கான அடிப்படையாக போதித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பம். என் அனுபவ கணக்கு அது.
ஒருவேளை இப்போது பள்ளிப் பாட புத்தங்கங்களை எடுத்து வைத்து மீண்டும் முதல் கட்டத்திலிருந்து ஆரம்பித்தலும் கூட சரியான படியாக தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
சாதாரண வாசகர்களை இலக்கியத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த முக்கியமான வெகு கவர்ச்சியான ஊடகம் சுஜாதாவின் பல படைப்புகள். அதில் சிலதுகள் மிகவும் முக்கியமானவை, 401 காதல் கவிதைகள் போல. தமிழைப் பொறுத்தவரை சுஜாதாவின் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுவது இதை தான்.
-- பால் ஆரோக்கியம்
No comments:
Post a Comment