Wednesday, September 11, 2013

அன்பை உதறிச் செல்வதற்கு..

அன்பை உதறிச் செல்வதற்கு
பெரிதாய் காரணங்களெதுவும்
தேவைபடுவதேயில்லை எனக்கு​.............

ஒரு
சிறிய விருப்பமின்மை
சிறிய தடுமாற்றம்
சிறிய சலசலப்பு
சிறிய குறுக்கீடு
சிறிய முகச்சுழிப்பு
சிறிய கோபம்
சிறிய உதறல்
சிறிய புறகணிப்பு
சிறிய சகிப்பின்மை
சிறிய அருவருப்பு
சிறிய துரத்தல்
சிறிய தூற்றல்
சிறிய வெறுப்பு
சிறிய நட்பின்மை
சிறிய வாக்குவாதம்
சிறிய வேதனை
சிறிய வலி ​

ஏதோவொன்று
மிக சிறியதாக
கிடைத்தாலே போதும்

இன்னும் சொல்லப் போனால்
அன்பை உதறி செல்வதற்கு
எனக்கு
இன்னொரு
சிறிய அன்பு போதும்

​-- பால் ஆரோக்கியம்

No comments:

Post a Comment