அன்பின் இறுதிக் காலங்களில்
வறண்டு கிடக்கும் கிணறுகள் பற்றி
எவ்வித கவலைகளுமற்று இருக்கிறோம்..
தாள முடியா தாகம்
தொண்டை அரிக்கையிலும் கூட
மழை வேண்டி பிராத்திக்க
நமக்கு தோன்றுவதேயில்லை..
அன்பின் இறுதிக் காலங்களில்
அதுவரை செலவழித்த
கணக்கற்ற அன்பின் மதிப்பை
பிரதிபலிக்கும் எதுவுமே
நம்மிடம் இல்லையென்னும் வெறுமை
கரிய நிறத்துடன் நம்மை சூழ்ந்து கொள்கிறது..
அதன் அடர்ந்த கருமையில்
நமக்கு முன் விரிந்திருக்கும் வழிகள்
முற்றிலுமாய் புதைந்து போய் விடுகின்றன..
அன்பின் இறுதிக் காலங்களில்
அன்பை பற்றி யோசிக்க நமக்கு
மிகவும் கசக்கிறது
நிறைய எரிச்சல்படுகிறோம்
மிதமிஞ்சி வெறுப்படைகிறோம்..
அக்காலங்களில்
அன்பின்மையின் மேல்
தீர்க்கமாக நம்பிக்கை கொள்ளத் தொடங்குகிறோம்..
அன்பின் இறுதிக் காலங்களில்
இழப்புகளை பற்றி நாம்
பெரிதாய் கவலைப்படுவதில்லை..
இல்லாத ஒன்றை இழக்கும் வாய்ப்பில்லை என்று
நாம் மிகவும் திட மனதுடன் இருக்கிறோம்..
அன்பின் இறுதிக் காலங்களில்
அதுவரையிலான பயணத்தின் குதூகலமோ
பகிர்ந்திருந்ததின் நிறைவோ
உரையாடல்களின் இனிமையோ
அருகாமையின் கதகதப்போ
ஏற்படுத்தாத தாக்கம் குறித்து
நிறைய ஆதங்கம் கொள்கிறோம்..
விடை கொடுத்தலை விட
அதன் பின்னும் தொடரவிருக்கும்
நமது பயணத்தை பற்றியே
அதிகம் சிந்திப்பவர்களாக இருக்கிறோம்..
அன்பின் இறுதிக் காலங்களில்
ஒன்றாய் அமர்ந்து உண்பதிலிருந்தும்
கதை பேசி சிரித்திருப்பதிலிருந்தும்
புகைப்படத்தில் இணைந்து புன்னகைப்பதிலிருந்தும்
படுக்கையை பகிர்ந்துக் கொள்வதிலிருந்தும்
நாம் விலகியே இருக்கிறோம்..
ஆனாலும் அக்காலங்களில்
பரிசளிக்கும் வாய்ப்புகளை மட்டும்
நாம் தவற விடுவதேயில்லை..
அளிக்கும் பரிசுகளின் கனம்
நம் குற்ற உணர்வுகளை விட
கொஞ்சமேனும் அதிகமாயிருக்கும்படி
எப்போதுமே பார்த்துக் கொள்கிறோம்..
-- பால் ஆரோக்கியம்
வறண்டு கிடக்கும் கிணறுகள் பற்றி
எவ்வித கவலைகளுமற்று இருக்கிறோம்..
தாள முடியா தாகம்
தொண்டை அரிக்கையிலும் கூட
மழை வேண்டி பிராத்திக்க
நமக்கு தோன்றுவதேயில்லை..
அன்பின் இறுதிக் காலங்களில்
அதுவரை செலவழித்த
கணக்கற்ற அன்பின் மதிப்பை
பிரதிபலிக்கும் எதுவுமே
நம்மிடம் இல்லையென்னும் வெறுமை
கரிய நிறத்துடன் நம்மை சூழ்ந்து கொள்கிறது..
அதன் அடர்ந்த கருமையில்
நமக்கு முன் விரிந்திருக்கும் வழிகள்
முற்றிலுமாய் புதைந்து போய் விடுகின்றன..
அன்பின் இறுதிக் காலங்களில்
அன்பை பற்றி யோசிக்க நமக்கு
மிகவும் கசக்கிறது
நிறைய எரிச்சல்படுகிறோம்
மிதமிஞ்சி வெறுப்படைகிறோம்..
அக்காலங்களில்
அன்பின்மையின் மேல்
தீர்க்கமாக நம்பிக்கை கொள்ளத் தொடங்குகிறோம்..
அன்பின் இறுதிக் காலங்களில்
இழப்புகளை பற்றி நாம்
பெரிதாய் கவலைப்படுவதில்லை..
இல்லாத ஒன்றை இழக்கும் வாய்ப்பில்லை என்று
நாம் மிகவும் திட மனதுடன் இருக்கிறோம்..
அன்பின் இறுதிக் காலங்களில்
அதுவரையிலான பயணத்தின் குதூகலமோ
பகிர்ந்திருந்ததின் நிறைவோ
உரையாடல்களின் இனிமையோ
அருகாமையின் கதகதப்போ
ஏற்படுத்தாத தாக்கம் குறித்து
நிறைய ஆதங்கம் கொள்கிறோம்..
விடை கொடுத்தலை விட
அதன் பின்னும் தொடரவிருக்கும்
நமது பயணத்தை பற்றியே
அதிகம் சிந்திப்பவர்களாக இருக்கிறோம்..
அன்பின் இறுதிக் காலங்களில்
ஒன்றாய் அமர்ந்து உண்பதிலிருந்தும்
கதை பேசி சிரித்திருப்பதிலிருந்தும்
புகைப்படத்தில் இணைந்து புன்னகைப்பதிலிருந்தும்
படுக்கையை பகிர்ந்துக் கொள்வதிலிருந்தும்
நாம் விலகியே இருக்கிறோம்..
ஆனாலும் அக்காலங்களில்
பரிசளிக்கும் வாய்ப்புகளை மட்டும்
நாம் தவற விடுவதேயில்லை..
அளிக்கும் பரிசுகளின் கனம்
நம் குற்ற உணர்வுகளை விட
கொஞ்சமேனும் அதிகமாயிருக்கும்படி
எப்போதுமே பார்த்துக் கொள்கிறோம்..
-- பால் ஆரோக்கியம்
No comments:
Post a Comment