ஒரு கவிதை எழுதினேன். புரிந்து கொள்பவர்களுக்கும் புரிந்து கொள்ளப்படுகிறவர்களுக்கும் நடுவில் வலை போட்டு பின்னிக் கொள்ளும் ஒரு புதிர் பற்றி. பிறகு என் தோழியிடம் அக்கவிதையை காண்பித்தேன். அவள் அதை நீண்ட நேரம் படித்தாள். திரும்ப திரும்ப படித்தாள். பிறகு புருவங்களை உயர்த்தினாள்.
"மிகவும் புதிராக இருக்கிறது", என்று திருப்பிக் கொடுத்தாள்.
-- பால் ஆரோக்கியம்
No comments:
Post a Comment