Thursday, May 8, 2014

அன்பின் சாபக்கேடு !

நெருக்கமான சில நண்பர்கள் சட்டென்று ஒரு கணத்தில் அந்நியமாகி நிற்பது மிகுந்த வியப்பை அளிக்கிறது. வருத்தப்படுவதில் ஆதாயம் எதுவும் இல்லை என்பதால் வியப்பை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.

பொதுவாகவே மனிதர்கள் மாறுவது மாறாத நியதியாகிவிட்ட இக்காலக்கட்டத்தில், மாறாத மனிதர்களின் வாழ்வை எப்படி நியாப்படுத்துவது ? அல்லது மாறிவிடும் மனிதர்களின் இயல்பை எப்படி குறை சொல்வது ? அங்கே புரிதல் என்பது பொறுத்துக் கொள்ளலின் மற்றொரு பக்கமாகி விட, வியப்பைத் தவிர வேறெதை தேர்ந்தெடுப்பது ?

ஆதாயத் தொடர்பை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் நண்பர்களெனும் அம்மனிதர்களிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியாத ஆதங்கம் பலரிடமும் இல்லாமலில்லை.

அன்பின் மிகப் பெரிய சாபக்கேடு எளிதில் மன்னிக்கும் மனதை தாங்கி நிற்பது தான். நட்பை கேலிக் கூத்தாக்கும் மனிதர்களின் பால் தம் கரம் நீட்டும் அன்பு வியப்பு என்பதிலிருந்து விலகி தன் இயல்புகளில் ஒன்று என்றாகி நிற்கிறது. இப்பதிவை எழுதும் நானும் கூடஅன்பினது சாபக்கேட்டின் நிமித்தம் யாரோ ஒருவர் கொண்ட வருத்தத்திற்கு காரனமானவனாக இருந்திருக்க கூடும் என்பது ஒருபுறம் இருக்கவே செய்கிறது.

நான் உத்தமன் என்று சொல்லவில்லை. அதற்காக உத்தமனற்றவர்களை ஆதரிக்க வேண்டுமா என்ன ?

பால் ஆரோக்கியம்.
08-மே-2014.

No comments:

Post a Comment