Friday, May 9, 2014

[ கவிதை ] ஒடிந்த சிறகு

சிந்தனைகளினூடே தடுமாறிய கணமொன்றில் 
சிறகுகளிலொன்று ஒடிந்து தொங்க 
செய்வதறியாது 
விழித்து பதறி 
அல்லது 
பதறி விழித்து நிற்கிறேன் 

பறத்தலென் நோக்கங்களிலொன்றாக
இருந்ததேயில்லை என்ற போதிலும் 
ஒடிந்த சிறகின் சோகமும் 
அதையொட்ட வைக்கும் பதற்றமும் 
எதற்காகவென்னும் கேள்விகளின் சிந்தனைகளில் 
மீண்டும் தொலைகிறேன் 

எவ்வளவு சிந்தித்தாலும் 
போதுவதேயில்லை 
உத்தியொன்றை கண்டறிந்து 
சிந்தனைகளிலிருந்து மீண்டு வர 

பால் ஆரோக்கியம்.
09-மே-2014.

No comments:

Post a Comment