Thursday, May 8, 2014

[ கவிதை ] தகுதிச் சான்றிதழ்

சற்று அதிகமாகவோ 
அல்லது 
சற்று குறைவாகவோ
மட்டுமே வழங்கப்படும்
தனக்கான தகுதிச் சான்றிதழை 
வெறித்தப்படி இருந்தாள் 
நீண்ட நேரம்..
நீண்ட நாட்கள்..
வாரங்கள்.. மாதங்கள்.. வருடங்கள்..

அவள் மனம் 
மிக வருந்தியது 
தன் தேர்வுகளோ 
அதன் மீதான தனது நிறைவோ 
கணக்கில் 
எடுத்துக் கொள்ளப்படாமலேயே
இருப்பது குறித்து

பிறகு 
அவளொரு காரியம் செய்தாள் 

அவளுக்கு அளிக்கப்பட்ட தேர்வுகளிலிருந்து 
அது 
மிகவும் விலகியிருந்தது 

அப்போது வழங்கப்பட்ட சான்றிதழில் 
அச்சிட முடியவில்லை 
அவர்களால் வேறெதையும் 
அவள் தேர்ந்ததை தவிர 

பால் ஆரோக்கியம் 
08-மே-2014.

No comments:

Post a Comment