Thursday, July 17, 2014

[ கவிதை ] பாச மலர்களே!

அன்பின் மலர்களே 
அன்பற்ற பொழுதுகளில் 
அணுகப்படாதது குறித்து 
என்றேனும் வருந்தியிருக்கிறீர்களா..?

அல்லது 
ஓய்வின் மடியில் 
சாய்ந்துப் படுத்து 
அமைதிக் கொண்டீர்களா..?

மாறும் மனிதரின் 
மனநிலைக் குறித்து 
மனதிற்குள் சிரித்திருக்கிறீர்களா..?

அல்லது 
மாற்றம் என்பது 
இயற்கையின் நியதியென்று
சமரசம் கொண்டீர்களா..?

அன்பின் மலர்களே 
என்றேனும் நீங்கள் 
சப்தமாய் பிராத்தித்திருக்கிறீர்களா
அறுத்து புதைத்திட்ட அன்பைத் 
தோண்டிப் பறித்து 
ஒட்ட வைக்கும் ஆற்றல் வேண்டி..?

பால் ஆரோக்கியம்.
17-ஜூலை-2014.

No comments:

Post a Comment