சதுரங்கத்தில்
சிங்கத்தை வேட்டையாட விரும்பி
முன்னேறும் ஒருவனது
துடிப்பு பற்றி
என்ன நினைக்கிறீர்கள்..?
அவனுக்கான போர்க்களம் அதுவல்ல
என்பதை
சீற்றத்தில் இருக்கும்
அவனது செவிகளில்
கிசுகிசுக்கும் வழி எதென்று
எப்படி அறிவீர்கள்..?
நிழலுடன் போராடுபவனுக்கும்
அவனுக்கும்
இருக்கும் ஒற்றுமைகளாக
எதை நீங்கள் கருதுகிறீர்கள்..?
அவனது துடிப்பின்
மீதான கருணையின் நிமித்தம்
தோன்றியிருக்கிறதா உங்களுக்கு
விதிமுறை மீறி
சதுரங்கத்தின் உள்ளே
சிங்கத்தை இழுத்து வந்து நிறுத்த..?
பால் ஆரோக்கியம்.
18-ஜூலை-2014.
சிங்கத்தை வேட்டையாட விரும்பி
முன்னேறும் ஒருவனது
துடிப்பு பற்றி
என்ன நினைக்கிறீர்கள்..?
அவனுக்கான போர்க்களம் அதுவல்ல
என்பதை
சீற்றத்தில் இருக்கும்
அவனது செவிகளில்
கிசுகிசுக்கும் வழி எதென்று
எப்படி அறிவீர்கள்..?
நிழலுடன் போராடுபவனுக்கும்
அவனுக்கும்
இருக்கும் ஒற்றுமைகளாக
எதை நீங்கள் கருதுகிறீர்கள்..?
அவனது துடிப்பின்
மீதான கருணையின் நிமித்தம்
தோன்றியிருக்கிறதா உங்களுக்கு
விதிமுறை மீறி
சதுரங்கத்தின் உள்ளே
சிங்கத்தை இழுத்து வந்து நிறுத்த..?
பால் ஆரோக்கியம்.
18-ஜூலை-2014.
No comments:
Post a Comment