Wednesday, March 3, 2010

நேர்மை சோதிக்கப்படும் சில கணங்கள்..

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த போது இரவு 8 மணியிருக்கும்.. வழக்கம் போலலாமல் அன்று அதிகமாகவே பசித்தது. 'ஒருவேளை ஸ்நாக்ஸ் (snacks) ஏதும் இவினிங் சாப்பிடாததால இருக்கும்', என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன். நான் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் புதிதாக ஒரு ரெஸ்டாரன்ட் (restaurant) திறந்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. "அம்மா பிரியாணி"யென்று பெரிய பலகையுடன் ஜொலித்த அந்த ரெஸ்டாரண்டில் உணவு எப்படியிருகிறதென்று ஒருநாள் ருசி பார்க்க வேண்டுமென்று யோசித்து கொண்டிருந்தேன். பசி அதிகமாக இருக்கவும், 'இன்று நல்ல நாள்..' என்று எனக்கு நானே சொல்லி கொண்டு அந்த ரெஸ்டாரன்டிற்குள் நுழைந்தேன்.

மிகுந்த யோசனையுடன் நேர்த்தியாக போடப்பட்ட மேஜைகள், வண்ண சுவர் அழங்காரங்கள், மனதை தாலாட்டும் இசையென்று சூழ்நிலையை (environement) மிகவும் அருமையாகவே வைத்திருந்தனர்.. உட்கார்ந்த சிறிது நேரத்தில், மிகவும் பவ்யமாக ஒருவன் வந்து நின்றான். மெனு கார்டை நீட்டினான். மிகவும் குறைவான உணவு வகைகளே மெனு கார்டில் இருந்தன. "மே பி தே ஆர் கன்சென்ட்ரேடிங் ஆன் க்வாலிட்டி ஆப் ஐடம்ஸ் தான் க்வாண்டிட்டி (may be they are concentrating on quality of items than quantity)", என்று நினைத்தேன். மெனு கார்டில் இருந்தவைகளை ஒருமுறை பார்த்து விட்டு, "ஒன் எக் பிரியாணி.. அண்ட்.. ஹ்ம்ம் ஒன் சிக்கன் கர்ரி.. (one egg briyani.. and.. hmmm.. one chicken curry)", என்றேன்.

நான் சொன்னவற்றை குறித்து கொண்டு நகர முயன்றவனை, "ஹ்ம்ம் வெயிட்..," என்று சட்டென்று தடுத்து, "மேக் இட் சிக்கன் 65.. நாட் சிக்கன் கர்ரி..", என்றேன். அவன் ஆர்டரை திருத்தி எழுதி கொண்டு, மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்திக் கொள்ள திரும்ப சொன்னான். "ஒன் ப்ளேட் சிக்கன் 65 அண்ட் சிக்கன் பிரியாணி..", என்று சொல்லிவிட்டு எனது முக அசைவை நோக்கினான்.

நான் புன்னகைத்து கொண்டு, "நோ.. சிக்கன் 65 அண்ட் எக் பிரியாணி.." என்று சொல்ல, மீண்டும் திருத்தி கொண்டு உள்ளே சென்றான். பின்பு மினரல் வாட்டரை அழகான தம்ளர்களில் பரிமாறினான். சிறிது நேரத்தில் உணவு வந்துவிட்டது. சிக்கனை எடுத்து கடித்து பார்த்தேன்.. சுவை நன்றாகவே இருந்தது.. பிரியாணியை சுவைத்தேன்.. அதுவும் சுவையாகவே இருந்தது.. "ஹப்பா.. கடைசியில ஒரு நல்ல ஹோட்டல் பக்கதுல வந்துடுச்சு..", என்று சந்தோஷப்பட்டேன்.

சாப்பிட்டு முடித்ததும் பில் கொண்டு வந்து வைத்தான். எக் பிரியாணிக்கு பதிலாக பிரியாணி ரைஸ் (briyani rice) என்று தவறுதலாக குறிப்பிட்டு இருக்க, மொத்த தொகையில் 10 ரூபாய் குறைவாக குறிப்பிடப்பட்டிருந்தது.. ஏனெனில் பிரியாணி ரைஸின் விலை எக் பிரியாணியை விட 10 ரூபாய் குறைவு.. 'ஆஹா.. 10 ரூபாய் கம்மியா போட்டிருக்கானுங்க..' என்று உள்ளுக்குள் ஒரு குதூகல உணர்வு தோன்றியது. ஆனால் அது சில வினாடிகளுக்கு மட்டும் தான். உள்ளுக்குள் இருந்த மனசாட்சி உடனே விழித்து கொண்டது. "பால்.. தப்பா போட்டிருக்கீங்கன்னு உண்மைய சொல்லிடு..", என்று கத்த ஆரம்பித்து விட்டது.

உண்மையை சொல்லிவிடலாமென்று போகும் அந்த வினாடியில், "வெயிட்.." என்று எனது மனதின் இன்னொருபுறம் சொல்லியது. "தப்பா பில் போட்டிருக்கீங்கன்னு சொல்லி வேற பில் கேட்டா, 'ஏண்டா சரியா சொல்லலன்னு' இவன கண்டிப்பா அவனோட முதலாளி அடிக்க போறான்.. பாவம்..", என்று தோன்றியது. "அதுக்கப்பறம் அவன் முதலாளி இனிமே இவன எதுக்கும் நம்பாம போகறதுக்கும் வாய்ப்பிருக்கு..", என்று தோன்றியது. 'நம்மளால எதுக்கு ஒருத்தனோட வேலையிலே ப்ராப்ளம் வரணும்..', என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்..

இப்போது என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை.. "நேர்மையாக இருப்பதா..? அல்லது இவனை காப்பாற்றுவதா..?", என்று யோசித்தேன். 'இவன காப்பாத்தினா மறுபடியும் இவன் இதே மாதிரி கவன குறைவா இருந்து இதே தப்ப செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்..?', என்றும் தோன்றியது. 'நா சொல்லாம போறது இவன் கவன குறைவா இருக்கறத உற்சாகப்படுத்துற மாதிரியில்ல ஆயிடும்..', என்று நினைத்தேன். அவன் செய்த தவறை தொடர்ந்து செய்வதற்கு அனுமதிக்கவும் மனம் வரவில்லை. சில வினாடிகள் குழம்பி தான் போய்விட்டேன், என்ன செய்வதென்று தெரியாமல்!

கொஞ்ச நேரம் யோசித்தேன்.. "அஹ்.. ஹெல் வித் தெம் (hell with them)! அதான் இவனுங்க இவ்ளோ அதிகமா சார்ஜ் பண்றானுங்களே, பத்து ரூபா கடைகாரனுக்கு ஒன்னும் பெரிய இழப்பு இல்ல..", என்று தோன்ற, கிடைத்த பத்து ரூபாயில் ஐந்து ரூபாயை டிப்ஸில் சேர்த்து வைத்து விட்டு, மீதி ஐந்தை எனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டேன். "அவனுக்கும் எனக்கும் பிப்டி-பிப்டி..", என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

"என்னை அப்டி பாக்காதீங்க ப்ளீஸ்!".. 'நா நல்லவன் தாங்க.. உண்மையிலேயே அவன காப்பாத்தனும்னு தான் நா சொல்லல.. நா பில்லு தப்புன்னு சொல்ல போக, அவன் வேலைக்கு ஏதாச்சும் ப்ராப்ளம் வந்திட போகுதுன்ற நல்ல எண்ணத்துல தான்..'

ஆனால் அவனை தனியாக பார்த்து, "பில்லை தவறாக போட்டிருக்கிறாய், சொன்னால் உன் வேலைக்கு பிரச்சனையாகிவிடும் என்று தான் நான் சொல்லவில்லை.. இனிமேல் இப்படி கவன குறைவாக இருக்காதே..", என்று சொல்லிவிட்டு வந்திருக்கலாமென்று வீட்டிற்கு வந்தவுடன் தான் தோன்றியது.

என்னமோங்க.. அந்த பத்து ரூபாய வைச்சிக்க எனக்கு மனசு வரல.. அதனால என்னோட நேர்மைக்காக, நா அந்த பத்து ரூபாய என்னோட நன்கொடை நிதியிலே (charity fund) போட்டுறேன்.. கண்டிப்பா கஷ்டப்படுற யாருக்காவது உதவறப்போ அந்த பத்து ரூபாயையும் சேத்து கொடுத்திடுறேன். ஓகே வா.. என்னை நம்புங்க..

No comments:

Post a Comment