Thursday, May 6, 2010

நல்ல நண்பர்கள் சிலர்..

நண்பர்களுடன் வெளிச்சென்று, ஊர் சுற்றி, அரட்டை அடித்துவிட்டு, வீடு திரும்புகையில் ரொம்பவே தளர்ந்து விடுகின்றது உடல்.. மனமோ இரட்டிப்பானதொரு புத்துணர்ச்சியுடன்.. நல்ல நண்பர்கள் அமைவதற்கும், அவர்களுடன் பொழுதை கழிக்க நேரம் கிடைப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒருவன் புத்துணர்ச்சி இழந்து, உணர்வளவில் கீழே போய்க் கொண்டிருக்கும் போது, 'டேய் லூசு.. மேல வாடா..' என்று தம் கரம் நீட்டி தூக்கி விடுபவர்கள் நண்பர்களே..

சோர்வாக இருக்கும் போது புத்துணர்ச்சியூட்டியும், புத்துணர்வுடன் இருக்கும் போது கிண்டலடித்து சிரிக்க வைத்தும், வாழ்வின் காணாத பல பக்கங்களை காண செய்பவர்கள்.. பிரச்சனையென்று வந்து மனசுமைகளால் சோர்ந்து விழும் சமயங்களில் 'சுமைகளை இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் இளைப்பாறி கொள்' என்பதாக அவர்கள் தரும் ஆறுதல்களும், காட்டும் அக்கறையும் தெரிந்ததே என்றாலும் கூட, ஒவ்வொரு முறையும் அது உணர்வுபூர்வமான தாக்கத்தை உண்டு பண்ண தவறுவதில்லை..

அப்படித் தான் இன்றும்.. உணர்வளவில் துடிப்பில்லாமல் உற்சாகமிழந்திருந்த என்னை, 'வாடா..' என்று அழைத்து வசந்தம் காண செய்தார்கள் என் நண்பர்கள் இருவர்.. 'என்ன சம்பாதித்தோம்..?' என்று அவ்வப்போது எழும் வாழ்வினது எதார்த்தமான கேள்விகள் மனதை குடையும் போது தோன்றாத சில பதில்கள் இம்மாதிரியான நேரங்களில் தட்டுபடுகின்றன.. 'பணம் சம்பாதித்தோமோ இல்லையோ, நல்ல சில மனங்கள் சம்பாதித்திருக்கிறேமே.. அது போதாதா'..!! இது போன்ற தருணங்கள் நிறைவானதொரு உணர்வை எப்போதும் ஏற்படுத்த தவறுவதில்லை..

No comments:

Post a Comment