இடித்து முன்னேறி செல்லும் கூட்டத்தினூடே, மூச்சு கூட விடாது பாதையில் கவனம் செலுத்தி வேகமாக நடக்கின்ற வேளையொன்றில் எதிர்பாராமல் தட்டுபடுகின்றது பிஞ்சு கரமொன்று.. உலகை இன்னும் அறிந்திடாததாலோ என்னவோ அவள் பிஞ்சு முகத்தில் இன்னமும் எஞ்சியிருக்கிறது மிருதுவான தன்மையின் சிலத்துளிகள்..
பார்த்தவுடனேயே பரிதாபம் தட்டும் பாவனைகள் முகத்தில் நிறைந்திருக்க, பசிப்பதாக சொல்லி தன் வயிற்றின் மேல் மெதுவாக தட்டியபடி கை நீட்டுகிறாள்.. உள்ளுக்குள் ஒட்டிப் போயிருக்கும் அவளின் வயிறோ அணிந்திருக்கின்ற அவளது உடையின் தடிமனை விட மெலிந்திருக்கின்றது.. உள்வாங்கிய கண்களில் அவளது குட்டி முகத்திற்கு அழகாக பொருந்தும் விதமாக சின்னதாய் இரு விழிப்பந்துகள் உருண்டு நின்று என் முகம் நோக்க, அதன் அழகை ரசிக்க விடாமல் விழிகளின் மேல் படர்ந்திருக்கின்றது நீர்த்துளிகளின் மெல்லிய படலமொன்று..
'என்ன வேண்டுமெ'ன்று கேட்கிறேன்.. காயத்திற்கு மருந்து போடுங்கள் என்பதை போல் காசின் மேல் குறியில்லாது, 'சாப்பிட ஏதாச்சும் வாங்கி தாங்க' என்று அவள் பிஞ்சு உதடுகள் கெஞ்சி கேட்கின்றன.. வேலைக்காக ஓடிக் கொண்டிருந்தாலும், எல்லாவற்றையும் விட இது முக்கியமென்று ஏதோ ஒன்று உள்ளுக்குள் சொல்ல, 'சரி வா'வென்று அருகிலிருக்கும் உணவகம் அழைத்து செல்கிறேன்..
'இங்கேயே சாப்பிடு' என்று உணவகம் உள்ளே அழைக்க, அவளோ சற்று தயங்கியபடியே, 'அம்மா உடம்பு சரியில்லாம அங்க இருக்காங்க.. நா அவங்களோட சாப்பிடுறேன்..' என்பதாக சொல்கிறாள். அவளையும் அறியாமல் மெலிந்த அவளது கரம் நடைமேடையின் ஒதுங்கிய முனையொன்றை நோக்கி நீள்கிறது.. அங்கே ஒருக்களித்து பெண்ணொருத்தி ஒடுங்கி அமர்ந்திருக்கிறாள்.. அவள் வயிற்றிற்குள் பரவியிருப்பதாக சொன்ன பசியின் அவஸ்தையை உணர முடிந்ததோ இல்லையோ, சொல்லத் தெரியாத ஏதோவொரு வலி கலந்த உணர்வு என் நெஞ்சுக்குள் படர ஆரம்பிக்கின்றது..
அந்நேர பசிக்கு உணவுகள் சிலவும், நாளைய பசிக்கு தாள்கள் சிலவும் என்று அவள் கையில் கொடுக்க, சொல்லத்தெரியாத உணர்வொன்றை அவள் விழிகள் வெளிப்படுத்த, விடைப்பெற்று நடக்கிறேன்.. செல்லாக் காசுகள் சிலவற்றிக்கு மனநிறைவின் கண்டிராத பக்கங்கள் சில பதிலாக பெற்ற உணர்வுடன் முன்னோக்கி நான் நடக்க, ஏதோ ஒரு பாரம் பின்னோக்கி இழுக்கின்றது. ஓரிரு நாட்கள் சென்ற பின்பு, கண்மூடி அமர்ந்திருக்கும் வேளையொன்றில், 'கொடுத்த காசு கரைந்திருக்கலாம்.. சரியாகி அவளன்னை இந்நேரம் எழுந்திருப்பாளோ அல்லது இன்னமும் அந்த இளம் பாதங்கள் இருத்தலிற்காக ஓடித் திரிகின்றனவோ..' என்பதான சிந்தனை தட்ட, கனக்க செய்யும் எண்ணங்கள் மாற்ற வேறொரு திசையில் கவனம் திருப்புகிறேன்..
சில வாரங்களுக்கு பின் மீண்டும் அவ்வீதி வழிச் செல்கிறேன்.. அன்று பார்த்த பிஞ்சு முகத்தின் மனப்பதிவை கையிலேந்தியபடியே கண்முன் விரியும் காட்சிகளை வடிகட்டுகின்றன என் விழிகள்.. வழக்கம் போல் இன்றும் அவ்வீதியில் தட்டுபடுவதென்னவோ உஷ்ணம் உமிழ்ந்து உரசிச் செல்லும் காற்றின் அலைகள் மட்டுமே.. என் மனதில் தடம் பதித்துச் சென்ற அந்த இளம்தளிர் அதன் பின்பு என் கண்களை கடந்து செல்லவேயில்லை..

படிக்கும் போதே உள்ளம் உருக்குகிறது ... அழகான கவிதையாய் .. மிகவும் அழகான பதிவு ..
ReplyDeleteவாழ்க தமிழ்
ஜானி பிரகாஷ்