நம் மேல் உண்மையான பாசத்துடன் இல்லையென்று தெரிந்தும் நாம் ஏன் இன்னும் அவர்களிடம் அன்பு செலுத்துகிறோம்..? நம்மிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்று தெரிந்தும் நாம் ஏன் இன்னும் அவர்களிடம் மென்மையாக இருக்கிறோம்..? தெரிந்தே நம்மை வெறுப்பேத்தி கோபப்படுத்துபவர்களிடம் நாம் ஏன் இன்னும் பொறுமையாக இருக்கிறோம்..? நமது இளகிய மனதை ஆதாயமாக பயன்படுத்துபவர்களிடம் நாம் ஏன் இன்னும் கனிவுடன் இருக்கிறோம்..? நமது பலவீனம் எதிரிகளின் பலமாக இருக்கின்றது என்பதை தெரிந்தும் அப்பலவீனத்தை களைய நாம் ஏன் முயற்சி எடுப்பதில்லை..?
நாம் எளிதாக மன்னித்து விடுவோம் என்பதற்காக தெரிந்தே தவறு செய்ய துணிபவர்களை இன்னும் எதற்காக மன்னித்து கொண்டிருக்கிறோம்..? நமது இதயங்களை சுக்குநூறாக்க துணிபவர்களிடம் நாம் ஏன் இன்னும் பாசம் செலுத்துகிறோம்..? நமது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தமது சுயநலம் பற்றியே யோசிக்கும் மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவமளித்து நமது மனதை நாமே ஏன் வேதனைப்படுத்திக் கொள்கிறோம்..?
ஏன் நாம் உணர்வளவில் இவ்வளவு பலவீனமாக இருக்கிறோம்? நமது நல்லுணர்வின் தன்மையை ஆதாயமாக பயன்படுத்தி நம்மை பலர் தொடர்ந்து வேதனைப்படுத்தினாலும் நாம் ஏன் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை..? எல்லோரும் மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் கண்ணும் கருத்துமாக அவரவர் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் ஏன் மற்றவர்களின் மேல் கருணை கொண்டு நம்முடையவற்றை தியாகம் செய்து நமது வாழ்க்கையை கேள்விக்குரியதாக்கி கொள்கிறோம்..?
நமது வாழ்க்கைக்கு, நம்முடைய உணர்வுகளுக்கு நாம் எப்போது முன்னுரிமை அளிக்க போகிறோம்..? நமக்கென்று நாம் எப்போது வாழப் போகிறோம்..?
மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!
Tuesday, May 25, 2010
Monday, May 24, 2010
இரங்கல்
மங்களூர் விமான விபத்து பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே நெஞ்சை உலுக்கி விட்டது. விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் கதையை கேட்கும் போதும் நெஞ்சம் பதறுகிறது. துபாயிலிருந்து வந்த இந்த விமானத்தில் எத்தனை பேர் தம் குடும்பத்தை விட்டு சம்பாதிப்பதற்காக அரபு நாடுகளுக்கு சென்று பல வருடங்கள் அங்கேயே இருந்து விட்டு தம் குடும்பத்தினரை பார்க்க வந்தவர்களோ.. விமானத்தில் பயணம் செய்தவர்களை வரவேற்க வந்தவர்கள் விமான நிலையத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தரை இறங்கிவிட்டதென்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் போதே கட்டுப்பாடு இழந்து விமானம் தறிகெட்டு போக, தன் கண் முன்னாலேயே தனக்கு உயிருக்கு உயிரானவர்கள் இறந்ததை பார்த்தவர்களது இதயம் எப்படி துடித்திருக்கும்..? நினைக்கும் போதே கண்கள் ஈரமாகின்றது.
தம் உயிருக்கு உயிரானவர்களை இழந்தவர்களுக்கு அந்த இழப்பை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை அந்த இறைவன் தான் கொடுக்க வேண்டும். வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. :'-(

Friday, May 21, 2010
வறுமை: உயிர்க் கொல்லி நோய்
வறுமையின் காரணமாக ஒரு தாய் தனது மூன்று பெண் குழந்தைகளை அனாதையாய் விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தியொன்று வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவத்தை தினமலர் நாளிதழின் இணையதளத்தில் படித்த போது நெஞ்சுக்குள் வலித்தது.
ராமாயி என்னும் 30 வயது பெண்மணி தனது நான்காவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த சமயத்தில் அவளது கணவன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டிருக்கிறார். ஏற்கனவே இருக்கும் தனது மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு வறுமையில் தவித்திருந்த ராமாயி, தனது நான்காவது குழந்தையை தனது தங்கைக்கு தத்து கொடுத்துவிட்டு, கூலி வேலை செய்து வறுமையில் வாழ்ந்திருக்கிறார். திடீரென்று ஒரு நாள் வறுமை தாங்காமல் மனமுடைந்த ராமாயி தனது மூன்று குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
பசியில் மட்டுமே தவித்திருந்த அந்த குழந்தைகள், இனி பாசத்திற்கும் ஆதரவிற்கும் கூட தவிக்கட்டுமென்று விட்டுவிட்டு எப்படி இவர்களால் இப்படியொரு முடிவை எடுக்க முடிகிறது? தற்கொலை செய்து கொள்வதெப்படி என்பது இவர்களுக்கு தெரிந்திருப்பதால் எளிதாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். உயிர் விடுவது எப்படியென்பது கூட தெரியாத அந்த இளம் தளிர்கள் என்ன செய்யுமென்பதை ஒரு கணம் ஏன் சிந்திக்காது இப்படி முடிவெடுக்கிறார்கள்..? வறுமையில் உழல்கிறோமென்று தெரிந்தும் கூட ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளை ஏன் பெற்றுக் கொள்கிறார்கள்..?
ஆறறிவற்ற நாய் கூட அடித்து பிடித்து தம் சேய்களுக்கு ஏதேனும் கொடுத்து எப்படியாவது வாழ்ந்து பார்க்க முயலும் போது, இவர்களுக்காக இல்லாவிட்டாலும் பெற்ற குழந்தைகளுக்காகவாவது எப்பாடுபட்டாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பதான பிடிவாதம் ஏன் இவர்களுக்கு வருவதில்லை..?
தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னார் பாரதி.. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் உழன்று பசியில் தவித்திருக்கும் இன்றைய உலகில் வறுமையென்னும் பிணியை போக்க நாம் என்ன முயற்சிகள் எடுக்கிறோம்..? ஜகத்தினை அழிக்க வேண்டாம். இவர்களது ஜாதகத்தை மாற்றவாவது ஏதேனும் செய்ய வேண்டாமா..? 'பசி' என்பதை ஏட்டில் எழுதி அதை நெருப்பில் போட்டாலோ அல்லது அழிப்பான் கொண்டு அழித்தாலோ, பசியென்னும் பிணி நம் சமூகம் விட்டு போய்விடாது. அதை களைய நம்மாலான முயற்சிகளை நாம் தான் எடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் பலர் இவ்வாறு பசியில் தவித்திருக்க, மறுபக்கம் நாமோ வீட்டில் கொடுக்கும் சாப்பாட்டை எட்டி உதைக்கிறோம். 'அது இல்லை.. இது இல்லை..' என்று வாழ்க்கையின் மேல் குறை கூறுகிறோம். உணவினை தேவைக்கும் அதிகமாக வாங்கி சமைத்து, பின்பு வீதியில் வீசி எறிந்து வீணாக்குகிறோம். நம் இனத்தை சேர்ந்த பலர் பசியில் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதான எண்ணம் பெரும்பாலும் நமக்கு வருவதே இல்லை.
வறுமையில் உழலும் இம்மாதிரியான மக்களுக்கு நேரடியாக உதவிகள் செய்ய முடியாவிட்டாலும், உணவினை வீணாக்காமல் உங்களாலான உதவியை மறைமுகமாக செய்யுங்களேன். கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவில்லாமல் தவித்திருக்கும் போது, நம்மிடம் பணமிருக்கிறது என்பதற்காகவும் நம்மால் முடியும் என்பதற்காகவும் தேவைக்கதிகமாக உணவு பொருட்களை வாங்கியும் உணவினை சமைத்தும் வீணாக்குவதை தவிர்த்தாலே அது ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.
'நான் உணவை வீணாக்காமல் இருப்பதால், அது எப்படி இத்தகைய மக்களுக்கு உதவியாக இருக்கும்' என்று நீங்கள் எண்ணுவீர்களேயானால், உங்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் தேவையான உணவு பொருட்களை மட்டுமே வாங்கும் போது, அத்தகைய உணவு பொருட்களுக்கான தேவை குறைகிறது. எனவே பொருட்களுக்கான தேவை குறையும் போது, உற்பத்தி அதே அளவில் இருந்தாலும் கூட விலையும் குறையும். அவ்வாறு விலை குறையும் போது அவற்றை நடுத்தர மற்றும் கீழ்நிலை மக்களும் கூட எளிதாக வாங்க முடியும்.
நம்மிடம் பணமிருக்கிறது என்பதற்காகவும், வீணாக்குவதால் நமக்கு பெரிதாக பாதிப்பு ஒன்றுமில்லை என்பதற்காகவும் எதையுமே வீணாக்குவதென்பது மறைமுகமாக இந்த சமூகத்திற்கு நாம் செய்கின்ற தீமையே.

Tuesday, May 18, 2010
இன்னும் சில சிந்தனைகள்.. (10)
பல உறவுகளில் தொடங்கும் போது இருக்கும் உற்சாகமும், அதன் மீதான மோகமும் போக போக மழை பொழிந்துவிட்ட மேகமாய் வறண்டு விடுகின்றன.. புதிதாக சந்திக்கும் போதும், முதன் முதலில் புன்னகைத்து பேச ஆரம்பிக்கும் போதும், மனதிற்குள் பறக்கும் பட்டாம்பூச்சிகள் நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன ['பட்டாம்பூச்சிக்கு வாழ்நாள் குறைவு தானேப்பா' என்றெல்லாம் மொக்கை போடாதீர்கள் ப்ளீஸ்!! :-)]..
நட்பு, நேசம், பாசம், அன்பு, காதல் என்பதில் தொடங்கி, பாராட்டு, வியப்பு, ஆச்சர்யம், மலர்ச்சி என்பதான எல்லா உணர்ச்சிகளையும் உறவுகளின் தொடக்கத்தில் நாம் வெளிப்படுத்த தயங்குவதில்லை. 'நீ என் வாழ்வில் வந்ததில் நான் எவ்வளவு மகிழ்கிறேன்..' என்பதை எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறோம். மலர்களை கொடுப்பதிலிருந்து, கை கோர்த்து நடப்பது, வானவில்லின் வண்ணங்களைக் கொண்டு அழங்கரிப்பதென்று இல்லாத கவிஞனை இதயத்திற்குள் ஏற்றி புதிதாக கிடைத்த உறவை முடிந்தவரை மகிழ்ந்து கொண்டாடுகிறோம்.
'நீ என் வாழ்வில் முக்கியமானவன்(ள்)'.. 'என் உலகமே உன்னை சுற்றி தான் இயங்குகிறது'.. 'என்ன வரம் பெற்றேன் உன்னுடன் உறவாட'.. என்று உள்ளுக்குள் பொங்கும் உணர்வுகளை உறவுகளின் தொடக்கத்தில் வெளிப்படுத்த நாம் தயங்குவதில்லை.. ஆனால் மாதங்களும் வருடங்களும் போக போக, ஏதோ சில காரணங்கள் மனதை மந்தமாக்கி விடுகின்றன. முன்பிருந்த அதே உற்சாகமும், உறவினை கொண்டாட வேண்டுமென்பதான உந்துதலும் மெல்ல மறைய தொடங்கி விடுகின்றன.
ஒருவிதத்தில் அதற்கு காரணம், 'அது தான் நம் வசமாகி விட்டதே..' என்பதான ஒரு அலட்சியபோக்கு.. தேவையான அளவிற்கு பாராட்டியும் கொண்டாடியும் விட்டோமே என்பதான எண்ணம் மனதிற்குள் புகுந்து கொள்கிறது. இன்னும் சிலருக்கோ, 'கழுதை வயதாகிறது.. இன்னுமென்ன கொஞ்சல்கள் வேண்டியிருக்கிறது..' என்று வயோதிகத்திற்கு அப்பாற்பட்ட உணர்வுகளுக்கும் மனதிற்கும் கூட வயோதிகத்தின் முத்திரை குத்தி கொள்கின்றனர். நாட்களாகிவிட்டது என்பதற்காக வாசனை வடிந்துவிட உறவுகளென்ன உதிர்ந்து கையிலிருக்கும் ஒற்றை பூவா..? அது தினந்தோறும் பல மலர்களை பூத்து குலுங்க வைக்க வேண்டிய மிகப் பெரிய மலர் செடியாயன்றோ இருக்க வேண்டும்..!! ஒற்றை இடத்திலேயே அசையாது நிற்கும் மலர்ச்செடிக்கு கூட தொடர்ந்து உயிர் வாழ தினந்தோறும் நீர் தேவைப்படுகிறது.. அப்படியிருக்கும் போது உறவுகள் எப்போதும் உயிரோடிருந்து வசந்தம் வீச அவ்வப்போது அதை கொண்டாடி உற்சாகப்படுத்த வேண்டாமா..?

Monday, May 17, 2010
வாய் பேசவில்லையென்றால் இப்படித் தான்..
பழகியே இருந்தாலும் கூட, பல நேரங்களில் வீட்டின் வெளிப்புற கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழையும் போது, 'நானிருக்கிறேன்..' என்பதை போல அந்த நாய் குரைத்து அதனது எஜமான் போடும் சோற்றிற்கு விசுவாசத்தை காட்டுவது பாராட்டப்பட வேண்டிய விஷயமே என்றாலும், எனக்கு எரிச்சல் தான் வரும். 'அந்நியன் எவன்.. அருகிலிருப்பவன் எவன்..' என்பது கூடவா இந்த நாய்க்கு தெரியாது. நான் அந்த வீட்டிற்கு வாடகைக்கு குடி வந்து ஒரு வருடங்களுக்கு மேலாகப் போகிறது. இருந்தாலும், அவ்வப்போது யாரென்றே தெரியாதது போல என்னை பார்த்ததும் சப்தமிட்டு குரைக்கும் போது, "ரொம்ப ஓவரா தான் பண்ற நீ.." என்று ஓங்கி அடிக்க வேண்டும் போலிருக்கும். நான் அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் குடியிருக்கிறேன். கீழே அடித்தளத்தில் வீட்டுக்கு சொந்தக்காரர் இருக்கிறார். அவர் வளர்க்கும் நாய் தான் அது. அந்த நாயை பார்க்கும் போதெல்லாம், "உன் சந்தோசம் பற்றி கவலைப்படாதவர்களிடம் அப்படியென்ன விசுவாசம் காண்பிக்கிறாய்..?" என்று கேட்க வேண்டும் போலவே இருக்கும் எனக்கு.
ஒருவிதத்தில் அந்த நாயின் மேல் எனக்கு அவ்வபோது எரிச்சல் வந்தாலும், பல நேரங்களில் அதை பார்க்கும் போது பரிதாபமாக தான் இருக்கும். அந்த வீட்டின் சொந்தக்காரரோ சைவம் சாப்பிடுபவர். பாவம், அந்த நாய்க்கும் அவர்கள் சைவமே வைப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
"நீங்க வெஜிடேரியன் தான் சாப்பிடுவீங்க.. அந்த நாய்க்காவது கறி எழும்புனு ஏதாச்சும் வாங்கிப் போடுவீங்களா..?", என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன்.
"அட.. நீங்க வேற தம்பி.. அது வெஜிடேரியன் நாய்.. அது எங்களோட இருந்து அப்படியே பழகிடுச்சு.. அது கறியெல்லாம் சாப்பிடாது..", என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
என்னவோ அந்த நாய்க்கு இவர் கறிசோறு போட்டு, அது வேண்டாமென்று தட்டை எட்டி உதைத்த மாதிரி சொன்னார். "அட பாவிகளா.. இந்த நெனப்பு வேறயா..", என்று தோன்றியது எனக்கு.
இதுவாவது பரவாயில்லை. அந்த நாயை வெகு சில நேரங்களில் மட்டுமே அவர்கள் அவிழ்த்து விடுவதுண்டு. அதுவும் அந்த வீட்டின் சுற்றுச் சுவரை தாண்டி செல்ல அதற்கு அனுமதியில்லை. அந்த நாயினால் போகவும் முடியாது. கதவு சாத்தியே இருக்கும்.
"ஏன்யா.. நீ மட்டும் நாலு பிள்ளைங்கள பெத்து வச்சிருக்கியே.. அந்த நாய்க்கும் அதுக்குண்டான உணர்ச்சி இருக்கும்னு என்னிக்காச்சும் யோசிச்சிருக்கியா..?" என்று கேட்டு அவர் தலையில் ஒரு கொட்டு வைக்க வேண்டும் போலிருக்கும் எனக்கு. இதுவரை அதை கேட்டதுமில்லை. அவர் தலையில் கொட்டியதுமில்லை. ஒருவேளை 'இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே..' என்பதான விரக்தியில் தான் அது யாரை பார்த்தாலும் அப்படி குரைக்கிறதோ என்று கூட தோன்றுவதுண்டு சில நேரங்களில். நாய்கள் வாய் பேசுவதில்லை என்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் நம் மக்கள்.

Thursday, May 13, 2010
ஆலோசனைகளோடு நிற்பதல்ல சமூக அக்கறை!!
சமூகத்தில் ஆங்காங்கே தன் கண்களில் தட்டுப்படும் பிரச்சனைகளையும் அவலங்களையும் பற்றி இப்பொழுதெல்லாம் பலர் இணையதளங்களில் அவர்களது பதிவுகளில் எழுத தொடங்கிவிட்டனர். முன்பெல்லாம் மனதிற்குள்ளேயே அடக்கி வைத்திருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்த இணையதளம் ஒரு மிக சிறந்த ஊடகமாக பயன்பட ஆரம்பித்து விட்டது. சமூக அக்கறையின் கண்ணோட்டத்திலான இத்தகைய பதிவுகளை படிக்கும் போது, 'பரவாயில்லையே இவ்வளவு பேர் சமூகத்தின் மீதான அக்கறையுடன் நல்லதொரு சமுதாயத்தை காண துடிப்புடன் இருக்கிறார்களே' என்று மகிழத் தோன்றும் அதே சமயத்தில் ஏமாற்றம் தரக்கூடிய ஒரு விஷயமும் பெரும்பாலான அத்தகைய பதிவுகளில் காண முடிகிறது.
தம் கண்முன் நிகழும் அவலங்களையும், மற்றவர் படும் கஷ்டங்களையும் தமது பதிவுகளில் எழுதி, சமூக அக்கறையுடன் வெளியிடும் அவர்களது பெரும்பாலான ஆலோசனைகள் சமூக ஆர்வலர்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும் மற்றும் அரசுக்கும் விடுக்கும் அழைப்புகளாகவே உள்ளன. சமூகத்தின் அவலங்களை சரி செய்யக் கூடிய பல நல்ல கருத்துக்கள் இவர்களிடம் இருந்தாலும், 'இத்தகைய ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த இருக்கவே இருக்கின்றன சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு..' என்பதாகவே இருக்கிறது பெரும்பாலும் இவர்களது கண்ணோட்டமும் எண்ணங்களும்.
சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை செய்வதற்கு யாரோ ஒரு சிலரோ அல்லது சில அமைப்புகளோ அல்லது அரசோ தான் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதான கண்ணோட்டம் மாற வேண்டும். சமூகத்தின் அவலங்களை கண்டு சகிக்க முடியாமல் கொதித்தெழுந்து அதை சரி செய்வதற்கான ஆலோசனைகளை மட்டும் வழங்காமல் தாமும் நேரடியாக களத்தில் குதிப்பது மிக சிலரே. சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் என்பதான சிந்தனை ஏன் மற்றவர்களுக்கு வர மறுக்கிறது என்பது தெரியவில்லை. மாற்றங்கள் எப்போதுமே 'தன்'னிலிருந்தே தொடங்குகிறது என்பதை எல்லோரும் அறிய வேண்டும்.
சமூகத்தின் அவலங்களை தமது பதிவுகளில் எழுதுவதற்கோ அதை சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவதற்கோ தைரியமாக முன்வரும் இவர்கள், அதை செயல்படுத்தும் பொறுப்பை மட்டும் 'யாரோ ஒருவர்' செய்வார்கள் என்பதான எண்ணத்தில் விட்டு விடுகிறார்கள். ஆலோசனைகள் சொல்வதோடு கடமைகள் எப்போதும் முடிவதேயில்லை. அந்த ஆலோசனைகளை செயல்படுத்த தாமும் தமது கண்ணோட்டத்தை அங்கீகரிக்கும் எண்ணம் கொண்ட தம் இனத்தவர் சிலரையும் இணைத்து கொண்டு அவற்றை செயல்படுத்த களத்தில் இறங்கும் போது தான் உண்மையான மாற்றங்கள் பிறக்கின்றன. பெரும்பாலும் அத்தகைய பதிவுகளை படிக்கும் போது, பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதோடு, அவற்றை செயல்படுத்த தம்மாலான முயற்சிகள் எடுப்பதை பற்றி அவர்கள் அறிவித்தால் நாமும் கை கொடுக்கலாமே என்று தொடர்ந்து படிக்கும் போது, பெரும்பாலும் முடிவில் எஞ்சுவது ஏமாற்றமே. ஆலோசனைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.
ஒருவிதத்தில், சமூக அவலங்களை கண்டவுடன் தம் உடலுறுப்புகளை மூடிக் கொண்டு அவ்விடம் விட்டு நகரும் மனிதர்களை விட அவற்றை பற்றி எழுதுவதோடு அவற்றை தடுக்க என்ன செய்யலாமென்று ஆலோசனைகளையாவது சொல்ல முன்வரும் இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. அதற்காக அவர்களை பாராட்ட தோன்றினாலும், 'யாரோ ஒருவர் இதை பார்த்துக் கொள்ளட்டும் என்று இல்லாமல் சமூகத்தில் ஒரு அங்கமான நீங்களும் உங்களாலான முயற்சிகளை எடுங்களேன்' என்று சொல்லவே தோன்றுகிறது.
வீட்டில் தூசு தட்டியிருக்கும் அலமாரியை பார்க்கும் போது, 'இத சுத்தம் செய்யலாம்ல.. வாரத்துக்கு ஒரு தடவ முடியாட்டியும் ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவயாச்சும் துடைச்சு விடுங்க..' என்று வீட்டிலிருக்கும் மற்றவரிடம் சொல்லும் பலர், தாமும் வீட்டில் ஒருவர் என்பதையும் அதை தாமே ஏன் செய்யக் கூடாது என்பதையும் யோசிப்பதில்லை. உற்று நோக்குகையில், ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவதோடு எல்லாம் முடிந்து விட்டதென்று நினைக்கும் அந்த மனோபாவம் அங்கு தான் தொடங்குகிறது. இது ஒரு சின்ன உதாரணம். அவ்வளவே!!
தாம் ஒரு முன்னுதாரணமாக இருந்து ஆலோசனைகளை செயல்படுத்த வேண்டுமென்பது பலருக்கு தோன்றுவதேயில்லை. எல்லாவற்றையும் எல்லோரும் செய்ய முடியாது என்பது உண்மையென்றாலும், முயற்சிகளை பகிர்ந்து செயல்படுத்த முன்வருபவர்களை காண்பது அரிதாகி விட்டது. "'இந்த' முயற்சியை நான் எடுக்கிறேன்.. 'அதை' நீங்கள் செய்யுங்கள்.." என்று முதலில் நாமும் செயல்படுத்த களத்தில் இறங்கும் போது தான் அங்கே உண்மையான மாற்றங்களை நாம் காண முடியும். இங்கிருக்கும் எல்லோருக்குமே 'ஸ்டார்டிங் ட்ரபிள்' என்று சொல்லப்படும் ஆரம்ப பிரச்சனை உண்டு. முதல் அடியை எடுத்து வைக்க எல்லோருக்குமே ஒரு தயக்கம் தான். பிரச்சனைகளை கண்டு சகித்து கொண்டு போகும் மக்கள் அத்தகைய அடியை எடுத்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. முதல் அடியை நாம் எடுத்து வைக்கும் போது, நமக்கு பின்னால் கைக்கோர்த்துக் கொண்டு பின்தொடர நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக முதல் அடியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டுமென்பதை உணர வேண்டும். மாற்றங்களை கனவுகளிலும் கற்பனைகளிலும் ஏடுகளிலும் மட்டுமே வடிப்பதோடு இல்லாமல், நிஜத்திலும் கொண்டுவர நம்மாலான முயற்சிகளை எடுப்போம்.

Thursday, May 6, 2010
நல்ல நண்பர்கள் சிலர்..
நண்பர்களுடன் வெளிச்சென்று, ஊர் சுற்றி, அரட்டை அடித்துவிட்டு, வீடு திரும்புகையில் ரொம்பவே தளர்ந்து விடுகின்றது உடல்.. மனமோ இரட்டிப்பானதொரு புத்துணர்ச்சியுடன்.. நல்ல நண்பர்கள் அமைவதற்கும், அவர்களுடன் பொழுதை கழிக்க நேரம் கிடைப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒருவன் புத்துணர்ச்சி இழந்து, உணர்வளவில் கீழே போய்க் கொண்டிருக்கும் போது, 'டேய் லூசு.. மேல வாடா..' என்று தம் கரம் நீட்டி தூக்கி விடுபவர்கள் நண்பர்களே..
சோர்வாக இருக்கும் போது புத்துணர்ச்சியூட்டியும், புத்துணர்வுடன் இருக்கும் போது கிண்டலடித்து சிரிக்க வைத்தும், வாழ்வின் காணாத பல பக்கங்களை காண செய்பவர்கள்.. பிரச்சனையென்று வந்து மனசுமைகளால் சோர்ந்து விழும் சமயங்களில் 'சுமைகளை இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் இளைப்பாறி கொள்' என்பதாக அவர்கள் தரும் ஆறுதல்களும், காட்டும் அக்கறையும் தெரிந்ததே என்றாலும் கூட, ஒவ்வொரு முறையும் அது உணர்வுபூர்வமான தாக்கத்தை உண்டு பண்ண தவறுவதில்லை..
அப்படித் தான் இன்றும்.. உணர்வளவில் துடிப்பில்லாமல் உற்சாகமிழந்திருந்த என்னை, 'வாடா..' என்று அழைத்து வசந்தம் காண செய்தார்கள் என் நண்பர்கள் இருவர்.. 'என்ன சம்பாதித்தோம்..?' என்று அவ்வப்போது எழும் வாழ்வினது எதார்த்தமான கேள்விகள் மனதை குடையும் போது தோன்றாத சில பதில்கள் இம்மாதிரியான நேரங்களில் தட்டுபடுகின்றன.. 'பணம் சம்பாதித்தோமோ இல்லையோ, நல்ல சில மனங்கள் சம்பாதித்திருக்கிறேமே.. அது போதாதா'..!! இது போன்ற தருணங்கள் நிறைவானதொரு உணர்வை எப்போதும் ஏற்படுத்த தவறுவதில்லை..

Saturday, May 1, 2010
வீதியொன்றில்..
இடித்து முன்னேறி செல்லும் கூட்டத்தினூடே, மூச்சு கூட விடாது பாதையில் கவனம் செலுத்தி வேகமாக நடக்கின்ற வேளையொன்றில் எதிர்பாராமல் தட்டுபடுகின்றது பிஞ்சு கரமொன்று.. உலகை இன்னும் அறிந்திடாததாலோ என்னவோ அவள் பிஞ்சு முகத்தில் இன்னமும் எஞ்சியிருக்கிறது மிருதுவான தன்மையின் சிலத்துளிகள்..
பார்த்தவுடனேயே பரிதாபம் தட்டும் பாவனைகள் முகத்தில் நிறைந்திருக்க, பசிப்பதாக சொல்லி தன் வயிற்றின் மேல் மெதுவாக தட்டியபடி கை நீட்டுகிறாள்.. உள்ளுக்குள் ஒட்டிப் போயிருக்கும் அவளின் வயிறோ அணிந்திருக்கின்ற அவளது உடையின் தடிமனை விட மெலிந்திருக்கின்றது.. உள்வாங்கிய கண்களில் அவளது குட்டி முகத்திற்கு அழகாக பொருந்தும் விதமாக சின்னதாய் இரு விழிப்பந்துகள் உருண்டு நின்று என் முகம் நோக்க, அதன் அழகை ரசிக்க விடாமல் விழிகளின் மேல் படர்ந்திருக்கின்றது நீர்த்துளிகளின் மெல்லிய படலமொன்று..
'என்ன வேண்டுமெ'ன்று கேட்கிறேன்.. காயத்திற்கு மருந்து போடுங்கள் என்பதை போல் காசின் மேல் குறியில்லாது, 'சாப்பிட ஏதாச்சும் வாங்கி தாங்க' என்று அவள் பிஞ்சு உதடுகள் கெஞ்சி கேட்கின்றன.. வேலைக்காக ஓடிக் கொண்டிருந்தாலும், எல்லாவற்றையும் விட இது முக்கியமென்று ஏதோ ஒன்று உள்ளுக்குள் சொல்ல, 'சரி வா'வென்று அருகிலிருக்கும் உணவகம் அழைத்து செல்கிறேன்..
'இங்கேயே சாப்பிடு' என்று உணவகம் உள்ளே அழைக்க, அவளோ சற்று தயங்கியபடியே, 'அம்மா உடம்பு சரியில்லாம அங்க இருக்காங்க.. நா அவங்களோட சாப்பிடுறேன்..' என்பதாக சொல்கிறாள். அவளையும் அறியாமல் மெலிந்த அவளது கரம் நடைமேடையின் ஒதுங்கிய முனையொன்றை நோக்கி நீள்கிறது.. அங்கே ஒருக்களித்து பெண்ணொருத்தி ஒடுங்கி அமர்ந்திருக்கிறாள்.. அவள் வயிற்றிற்குள் பரவியிருப்பதாக சொன்ன பசியின் அவஸ்தையை உணர முடிந்ததோ இல்லையோ, சொல்லத் தெரியாத ஏதோவொரு வலி கலந்த உணர்வு என் நெஞ்சுக்குள் படர ஆரம்பிக்கின்றது..
அந்நேர பசிக்கு உணவுகள் சிலவும், நாளைய பசிக்கு தாள்கள் சிலவும் என்று அவள் கையில் கொடுக்க, சொல்லத்தெரியாத உணர்வொன்றை அவள் விழிகள் வெளிப்படுத்த, விடைப்பெற்று நடக்கிறேன்.. செல்லாக் காசுகள் சிலவற்றிக்கு மனநிறைவின் கண்டிராத பக்கங்கள் சில பதிலாக பெற்ற உணர்வுடன் முன்னோக்கி நான் நடக்க, ஏதோ ஒரு பாரம் பின்னோக்கி இழுக்கின்றது. ஓரிரு நாட்கள் சென்ற பின்பு, கண்மூடி அமர்ந்திருக்கும் வேளையொன்றில், 'கொடுத்த காசு கரைந்திருக்கலாம்.. சரியாகி அவளன்னை இந்நேரம் எழுந்திருப்பாளோ அல்லது இன்னமும் அந்த இளம் பாதங்கள் இருத்தலிற்காக ஓடித் திரிகின்றனவோ..' என்பதான சிந்தனை தட்ட, கனக்க செய்யும் எண்ணங்கள் மாற்ற வேறொரு திசையில் கவனம் திருப்புகிறேன்..
சில வாரங்களுக்கு பின் மீண்டும் அவ்வீதி வழிச் செல்கிறேன்.. அன்று பார்த்த பிஞ்சு முகத்தின் மனப்பதிவை கையிலேந்தியபடியே கண்முன் விரியும் காட்சிகளை வடிகட்டுகின்றன என் விழிகள்.. வழக்கம் போல் இன்றும் அவ்வீதியில் தட்டுபடுவதென்னவோ உஷ்ணம் உமிழ்ந்து உரசிச் செல்லும் காற்றின் அலைகள் மட்டுமே.. என் மனதில் தடம் பதித்துச் சென்ற அந்த இளம்தளிர் அதன் பின்பு என் கண்களை கடந்து செல்லவேயில்லை..

Subscribe to:
Comments (Atom)