Friday, January 30, 2015

ஒரு கிறுக்கனின் நேர்ப்பார்வை [2]

மீண்டும் தனக்கான இடத்தை பிடித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் சிங்கம் அடிபட்டு விடும் போது, அடிபட்டுவிட்ட ஒன்றை போல தான் அது நடந்து கொள்கிறது. தனது தன்மானம் நகைப்புக்கு உள்ளாக்கப்படும் கணங்களை அது மெளனமாக எதிர்கொள்கிறது. மறுப்பேதும் சொல்வதில். சீறி பாய முனைவதில்லை. அதற்கு தெரியும். தனது நேரம் இன்னும் வரவில்லை என்று. அது வன்மம் கொள்வதில்லை. அதற்கு தெரியும் மாபெரும் குறிக்கோளை நோக்கிய தனது பயணத்தை வன்மம் திசை திருப்பக் கூடும் என்று.

தனது காயங்களைக் குணமாக்கிக் கொண்டு, தனது ஆற்றலை திரும்ப பெற்று மீண்டும் தனக்கான இடத்தில் அமர விரும்பும் சிங்கத்திற்கு இருக்கும் குறிக்கோள் ஒன்றே ஒன்று தான். அது இந்த கணத்தை கடந்து செல்லுதல். அக்கணத்தின் நகைப்பு, அவமானம், பின்னடைவு மற்றும் துரோகம், அதை சார்ந்த வலி, கோபம் மற்றும் தன் இருத்தலை அழிக்கவல்ல இன்னப் பிறவற்றை புறக்கணித்தவாறு இக்கணத்தை கடந்து செல்லுதல்.

அது அவமானங்களை வருத்தமின்றி எதிர் கொண்டு புன்னகைக்கிறது. பின்னாளில் தனது சரித்திரத்தை தாங்கி நிற்கும் தூண்களாக அவற்றைப் பார்கின்றது. அதற்கு தெரியும். இப்பின்னடைவு மற்றும் இந்த வலி தற்காலிகமான ஒன்று என்பது. அதற்காக கோபம் கொள்ளுதலும், எதிர்வினை ஆற்றுதலும் தனது முன்னோக்கிய பயணத்தில் பின்னோக்கிய அடிகளாகி விடும் என்று அது அறிந்தே இருக்கிறது.

அது தனது இன்னல்களை தடுமாறும் உறக்கத்தின் இடைப்பட்ட அமைதியில் கரைய விடுகிறது. பிறகு சேமித்து வைத்திருக்கும் ஆற்றலின் உதவியுடன் எழுந்து நடக்கிறது.

அது அறிந்தே இருக்கிறது 'நடந்தால் தான் நடக்கும்' என்பதை.

----

பந்துடனான ஆட்டம் 
-----------------------------------

படும் பாதங்களை 
புதைத்து விழுங்கிக் கொள்ளும் 
மணற்பரப்பிற்கும் 
தெளிவிழந்து 
மேகங்களைத் தாங்கி நிற்கும் 
வானிற்கும் இடையே 
தன்னை நோக்கி 
வீசப்படும் பந்துகளைத்
தடுக்கவும் பிடிக்கவும் 
கீழே விழாமல் அதை 
மற்றவர்க்கு கடத்தவும் 
ஒரு மனிதன் கொள்ளும் 
சிரத்தையும் 
அதன் முன்பின்னான படபடப்பும் 
பார்க்க அலாதியானது..!!

[கிறுக்கல் தொடரும்]

--
பால் ஆரோக்கியம் 

Thursday, January 29, 2015

ஒரு கிறுக்கனின் நேர்ப்பார்வை [1]

கிறுக்கனின் மொழி தொடர்பிழந்து தொடரும் ஒன்று.​

அவன் எதற்கும் அர்த்தங்களைத் தேடுவதில்லை. அர்த்தங்களைக் கொடுக்கிறான்.

ஒன்றின் இல்லாமை ஏதோ ஒன்றின் பொருட்டே நிகழ்வதாக அவன் நம்புகிறான்.

அவன் எல்லாரையும் எல்லாவற்றையும் கட்டி அணைத்துக் கொள்கிறான். வேறுபாடுகளை அவன் சுவையின் வெவ்வேறு பரிமாணங்களாக பாவிக்கிறான். சுவைக்கு வெவ்வேறு பரிமாணங்கள் இன்றியமையாதது என்பதை அவன் அறிந்து இருக்கிறான். கசப்பை பருகும் போதும், இனிப்பை சுவைக்கும் போதும், காரத்தின் விளைவுகளை விழிகளில் ஏந்தும் போதும் உள்ளுக்குள் ஏற்படும் உணர்வுகளை அவன் ரசிக்கிறான். அந்த ரசனையின் முடிவில் ஏதோ ஒன்றின் நிறைவு அவனைத் தழுவிக் கொள்கிறது. அப்போது அவன் லேசாக உணர்கிறான். வானில் பறக்கிறான்.

----

சித்திரம் பேசுதடி 
----------------------------
சித்திரங்கள் 
பேசுவதில்லை 

அவை 
பேச்சை நிறுத்தி விடுகின்றன 

பிறகு
மௌனத்தின் 
அழகு பற்றி 
மெளனமாக எடுத்து கூறுகின்றன 

அசையாமல் 
இருக்க வேண்டிய  கணங்கள் 
கடினமற்றதாகவும் 
மிகவும் ரசிக்கப்படவும் 
கடந்த காலத்தின் 
கடின உழைப்பு 
எவ்வளவு தேவையென்று 
காற்றின் சப்தத்தில் 
கவிதைகள் எழுதி 
நம் செவிகளை நோக்கி 
கை குவித்து ஊதுகின்றன 

 நகர்ந்து தன்னிடம் வரும் மனிதரை 
 புன்னகையுடன் வரவேற்று 
தன்னை விட்டு விலகி நகர்பவர்க்கு 
அப்புன்னகை மாறாமல் விடையனுப்பி 
அடியெடுத்து நகர நகர 
அடுத்தடுத்த பிரமிப்பு உண்டென்று 
சொல்லாமல் சொல்லும் அவை 
சொல்லி முடிக்கின்றன 
நாம் வரையும் இச்சித்திரம் 
எவ்வாறு வரையப்பட வேண்டுமென்று

[கிறுக்கல் தொடரும்]

--
பால் ஆரோக்கியம்

The Journey and it's awesomeness..! (3)

I, most of the times, do believe that the worst thing is being dead. Until then you can have hope for chances.

Some people may say otherwise considering the pain they have to go through. I say that it, most of the times, is just a matter of accepting the pain and embracing the same; then one can understand that the former is true.

Having said this, I do know that pain verses death is a debatable topic and the conclusion of what is better certainly based on the context of real situations.

--
Paul Arockiam

Wednesday, January 28, 2015

கேட்க விரும்பும் கேள்விகள் [1]

விளையாட்டாய் 
விதைத்து விட்டு 
நீர் ஊற்ற மறுக்கும் 
அவர்கள் மீதான 
உன் சாபங்கள் என்னென்ன..?

​--
பால் ஆரோக்கியம் ​

Monday, January 26, 2015

The Journey and it's awesomeness..! (2)

They say, "It takes a great courage to say 'everything happens for good' when what has been happening is indeed looks bit messy all around".

I say, it isn't the courage but a great understanding to say so.

--
Paul Arockiam

Thursday, January 22, 2015

The Journey and it's awesomeness..!

Every time I prepare myself to handle the situations with smiles, a new upcoming situation makes me to deal with an unknown - not yet introduced - face of the situation. Having not prepared, I helplessly burst out.

Then I calm myself down and add that face into my ignore list. The journey continues..

--
Paul Arockiam

Tuesday, January 20, 2015

[ கவிதை ] மலர் அலங்காரம்

இவ்வளவு தூரம் 
வந்த பிறகு தான் 
தூரத்தை துரத்தவே 
மனம் வருகிறது 

எல்லையைக் கடந்த பிறகே 
கோட்டின் மறுபக்கம் மீது 
இனம் புரியா ஈர்ப்பு 

கதவுகள் அடைபட்டப் பின்பு 
இறக்கைகள் விரித்து 
காற்றில் மிதக்க ஆசை 

கடைசி சொட்டு 
தீர்ந்த பிறகு 
மெல்ல மேலெழும் தாகம் 

கிளறப்பட்ட மண் 
சமன்படுத்தப்பட்டப் பிறகு 
அங்கிருக்க நாம் தகுதியற்றவர்கள் 
மெழுகுவர்த்தி ஏற்றியபடியும் 
மலர்களால் அலங்கரித்தபடியும் 

--
பால் ஆரோக்கியம் 

[ Why don't you take a moment to leave your reaction..? ]

Sunday, January 18, 2015

[திரைப்படம் பற்றி] PK - Paடைத்தவனைக் Kaணவில்லை ?

நம் நாட்டில் ஒருசில, அரசியல் காரணங்களினால் இப்போது 'பல' என்று ஆகிவிட்ட, விஷயங்களைப் பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் விமர்சிப்பதற்கும் மிக அதிகமான தைரியம் தேவைப்படுகிறது. தைரியத்தின் எல்லைகள் தொட வேண்டிய கடவுள் கொண்டு காசு செய்யும் தலைப்பை கையில் எடுத்துக் கொண்டு கொஞ்சமும் கால்கள் நடுங்காமல் பயணிக்கும் PK-யை முதுகில் தட்டிக் கொடுத்து "வாவ்(wow)" சொல்லாமல் இருக்க முடியவில்லை.

மனிதனையும் இவ்வுலகத்தையும் படைத்த கடவுளை மறந்து விட்டு மனிதனும் இவ்வுலகமும் படைத்த கடவுளை வணங்குவதும் அவ்வாறு வணங்க தூண்டி சக மனிதனின் பலவீனத்தையும் பயத்தையும் சாதகமாக்கி அவனை சுரண்டியும் தவறான திசைகளில் அவனைக் கையாண்டும் அதன் மூலம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியலையும் அதை சார்ந்த நாட்டின் நடப்புகளையும் நேர்த்தியான நகைசுவையுடனும் அதே சமயம் மனிதரின் மனம் நோக கூடாது என்னும் மிகுந்த கவனத்துடனும் எடுத்துக் காட்டி கேள்விகளின் மூலம் தெளிவுற செய்யும் PK ஒருமுறையாவது நிச்சயமாக சந்திக்கப்பட வேண்டியவன்.

எடுத்துக் கொண்டிருக்கும் கதையின் கரு மிகவும் உணர்வுபூர்வமான ஒன்று என்பதை அறிந்து, தான் முன் வைக்கும் கருத்தை கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் சொல்ல வேண்டும் என்னும் முனைப்புடன் கதையின் ஆசிரியர் தேர்ந்தெடுத்த கதை சொல்லும் விதத்தை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஒரு குழந்தையின் களங்கமற்ற மனதை சித்தரித்தே இக்கேள்விகளை மனிதர் மனம் நோகாத வகையில் முன் வைக்க முடியும் என்பதை கதையின் ஆசிரியர் புரிந்தே இருக்கிறார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த PK கதாப்பாத்திரத்தின் பின்னணி மிகவும் அறிவார்ந்த தேர்வு.

தன் கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக முன் வைத்து விட்டப் பிறகும் பல மனிதரின் இருத்தலிற்கான இன்றைய ஒரே நம்பிக்கையை (the only hope left for the survival of many people) சிதைக்காமல் தனது விவாதத்தை முடித்துக் கொள்ளும் கதை ஆசிரியரின் சமூகம் மீதான அக்கறை (care for the society) மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மதத் தலைவரான தபாஸ்வி மஹாராஜிக்கும் (Tapasvi Maharaj) PK-விற்கும் நடக்கும் இறுதி விவாதத்தில் தன் கருத்தின் ஆழத்தை பதிய வைக்க படத்தின் ஆரம்ப காட்சிகளின் மற்றொரு பரிமாணத்தை காண்பிப்பது மாஸ்டர் ஸ்ட்ரோக்.

நகைசுவையுடன் ஒரு படத்தை ஆரம்பித்து, கதை நகர நகர நகைசுவையின் வீரியத்தை அதிகரித்து - அதே சமயம் தன் கருத்துகளை ஆணித்தரமாக கேள்விகளின் மூலம் பதித்துக் கொண்டே சென்று -, இறுதியின் சட்டென்று குண்டூசி விழும் சப்தம் கூட கேட்கும் அளவிலான நிசப்தத்தை, அதிர்வை ஏற்படுத்தி முடிக்கும் திரைக்கதை அவ்வளவு எளிதாக எழுதப்படக் கூடியதல்ல. அதை செய்திருக்கும் திரைக்கதை ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

படைத்தவனைக் (கடவுள்) காணவில்லை என்று நோட்டீஸ் கொடுப்பதன் மூலம் கவனத்தை ஈர்த்து நகரும் PK, படைத்தவன் காணாமலடிக்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்லி நம் கண்களில் இருந்து மறைந்து விடைபெறும் போது திரை இருள்கிறது. நம் கண் முன்னே ஒரு வெளிச்சம் பிறக்கிறது.

PS: சமீபத்தில் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் PK (மொழி: ஹிந்தி). 

--
பால் ஆரோக்கியம்

Saturday, January 17, 2015

யார் எழுத்தாளன்..? எது புத்தகம்..?

ஒரு புத்தகம் என்பது படிப்பவரை ஒரு சில வரிகளுக்குள்ளேயே விழுங்கிக் கொள்ள வேண்டும். அல்லது சில பத்திகளுக்குள் (paragraphs). அதிகபட்சம் சில பக்கங்களுக்குள். படிக்க வேண்டுமே என்று படிக்க வேண்டிய சில புத்தகங்கள் இருக்கவே செய்கின்றன. அவை, குறைகளுடன் முறையிடப்படும் போதும், படிக்கப்படவே செய்கின்றன. மற்ற புத்தகங்கள், எவ்வகையை சார்ந்தவையாக அவை இருப்பினும், முன் சொன்ன முதல் மூன்றில் ஒன்றாக இருப்பது நலம்.

அவ்வாறு இருப்பது அப்புத்தகங்களை படிக்க தூண்டுவதோடு மட்டும் அல்லாமல் பொதுவாகவே புத்தங்கங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்கும். மக்களின் படிக்கும் ஆர்வம் குறைவதாக இன்று பல எழுத்தாளர்கள் கொள்ளும் ஆதங்கம் தேவையற்றதாக மாறும். அது முழுக்க முழுக்க ஒரு எழுத்தாளனின் கைகளில் தான் இருக்கிறது.

இலக்கியம் பேசுகிறேன், அல்லது எழுதுகிறேன், என்பதான பெயரில் எழுதப்படும் இன்றைய பற்பல புத்தகங்கள் கவனிக்கப்படாமலேயே போவதற்கு காரணம் வாசகரை, அவரது மனநிலையையும் தாண்டி, ஒரு சில நிமிடங்களிலேயே உள்ளுக்குள் இழுக்க தவறுவதால் தான் என்றே நினைக்கிறேன்.

என் நண்பன் சொல்வதுண்டு, "சுஜாதவை போல ஒரு சில வரிகளுக்குள் என்னை இழுத்து செல்லும் எழுத்தாளரை நான் தமிழில் இதுவரை வாசித்ததில்லை. அதனாலேயே இப்போதெல்லாம் நான் சுஜாதாவை தவிர வேறு யாரையும் படிப்பதில்லை". சுஜாதா தனது காலம் கடந்து நிலைத்து நிற்பதற்கு அது தான் காரணம். இன்று தன்னை எழுத்தாளராக சொல்லிக் கொள்ளும் பலர் தன்னைப் பற்றிய சுய செய்திகளில் தான் அதிகம் கவனம் செலுத்துகின்றனரே தவிர வாசிப்பவனுக்கு தன் எழுத்துக்கள் கொடுக்க வேண்டிய சுவாரசியம் பற்றி யோசிப்பதேயில்லை. அவனது மனநிலையையும் கூட தாண்டி அவனை எப்படி எழுத்துக்களின் மூலம் வசியம் செய்வது என்பது பற்றி சிந்திப்பதே இல்லை. இன்றைய கால கட்டத்தில் அவனுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் தேர்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள சிரத்தை எடுப்பதில்லை.

ஒருவன் எழுத்தாளன் என்னும் அங்கீகாரம் பெறுவது எழுத்துக்களின் மீதான அவனது ஆளுமையை மட்டுமே பொறுத்தது அல்ல. அதைப் படிப்பவர் மீது அவனது எழுத்துக்கள் ஏற்படுத்தும் பாதிப்பையும் பொறுத்தது. அப்போது அவன் தன்னை எழுத்தாளன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதை அவனுக்காக மற்றவர்கள் செய்வார்கள்.

--
பால் ஆரோக்கியம் 

Friday, January 16, 2015

[கவிதை] தேடலின் பொருள்

எல்லையற்ற தேடல்களில் 
தன்னைத் தொலைத்திருந்த அவன் 
எல்லையில் கால் பதித்த போது 
கையில் அகப்பட்ட உருவம் 
தனது என்பதை 
அறியும் நிலைக் கடந்திருந்தான் 

யாரென்று அவனிடம் 
உரக்க சொல்லியபடி சூழ்ந்திருந்தவர்களை 
சிறுக்குழந்தையின் மிரட்சியுடன் 
திருதிருவென்று பார்த்தபடி இருந்தான் 

பின்பு அவர்கள் 
அவனுக்கு
ஒரு பொருள் தந்தனர் 

அது 
தேடலில் குதிக்க 
முயல்பவர்களின் விழிகளில் 
கூச்சத்தை ஏற்படுத்தியது 

--
பால் ஆரோக்கியம் 

எழுதியதில் பிடித்தது

நான் எழுதியவற்றின் மீது பின்னோக்கி நடந்த போது பிடித்துப் போய் மிகவும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதாக தோன்றிய வரிகள்:

வாழ்வில் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்று உன் வாழ்வின் மீதான உனது பற்று. எவருக்காகவும் எதற்காகவும் நீ அதை விட்டுக் கொடுக்கவோ குறைத்துக் கொள்ளவோ முன் வராதே.

--
Paul Arockiam

Wednesday, January 14, 2015

"It is human who forgives" - A message to be taken seriously.

Reading a message from one of the survivors of the recent violent attack, I felt that the message is of great importance and should be taken seriously.

"It is we who forgive, not God.” [Some words have been changed to make it generic]
- Gérard Biard, editor in chief of Charlie Hebdo

To all those who believe violence is the only mean, let me tell you something. If you want to be violent, you may choose to be so. But be bold to say that it is you who seek such path. Be bold to say that it is you who believe that spreading love is nothing but creating pain. Be bold to say that it is you who believe that a fellow being doesn't hold the value of life because of what they may have done or what you may believe in. Do not do so in the name of God.

--
Paul Arockiam

மழையாக இருப்போம் [Let's be the rain] !

ஒரு ஏழை பள்ளிக்கு செல்ல இவ்வருடமும், பின்வரும் வருடங்களிலும் நாம் உதவுவோம். மழையாக இருப்போம். [Let's help a poor buy their way to school this year and the years coming. Let's be the rain.]

படித்ததில் மனம் கவர்ந்தது:

மழை 

ஆடு மேய்த்த சிறுவனை 
பள்ளிக்கு இழுத்துச் சென்றது 
மழை.
[ டே.துளசி ராஜா (ஆனந்த விகடன்) ]

--
Paul Arockiam

பப்ஃபூன்ஸ் !

படித்து வாங்கிய பட்டங்களைக் கூட தம் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதில் ஆர்வம் கட்டாத உயரிய கொள்கைகளுடன் உலா வரும் மனிதர்களுக்கு மத்தியில், தமது பெயரின் பின்பகுதியாக சாதியை இணைத்துக் கொண்டு வானம் பார்த்தபடி நடந்து தெரியும் அவர்களை ஒன்றும் சொல்லாதீர்கள். அவர்கள் நம்மை சிரிக்க வைப்பதற்காகவே தம் வாழ்நாளை அர்பணித்திருக்கும் கோமாளிகள் (#பப்ஃபூன்கள்; #buffoons).

--
Paul Arockiam

Friday, January 9, 2015

Love is all you need !

At the end, it all boils down to the fact that a little love is all what you need to regain your strength, to find your path again and to restore the lost hope.

Being in love with someone or something. Or be loved by someone or something. Best, the both. We demand the ones we love to love us back. The demand become more fatal when we want those to love us back the same way we love them. In this world of uncertainty, we find difficult to accept the fact that mind is the most fluctuating object in the world.


It is, therefore, wise to accept such fact of nature. We, most of us, want the person/thing we are in love with and be loved by to be the same. Unfortunately, the chances for the same is very less.


Having said that, I have found that be in love or being loved by has the same effect on the mind to uplift your energy, gives you new hope, helps you navigate in the unknown zones, find your lost hope. More importantly, it becomes a mean to start over if need be. While the combined effect of them is much more, all one need is just either one of them -- be in love or be loved by. Though the former is out of our control, the latter is absolutely our choice. A choice that can lighten up our life.


--

Paul Arockiam

Monday, January 5, 2015

வேண்டல்

வேண்டுவன 
கிடைத்தபடியே இருக்கின்றன 
மற்றவர்களுக்கு..

கிடைப்பவை யாவும்
வேண்டப்படாமலேயே நமக்கு 
அருளப்பட்டவாறு இருக்கின்றன..

வேண்டுவனவற்றையும் 
கிடைப்பனவற்றையும் 
ஒரே புள்ளியில் நாம் 
பார்க்க முடிவதேயில்லை 
படைத்தவனை விடவும் நாம் 
புரிதல் அதிகமுள்ளவர்களாய் இருப்பதனால்..!

--
பால் ஆரோக்கியம்.

Focusing The Energy

Off late, but not too late, I learnt that there is no point in spending energy in worrying or staying in the state of helplessness. In fact, it merely means that we chose not to do anything while the situation compels us to do something.

What I realized is that converting our stress, restlessness and/or frustration into something useful, something that keeps us move forward is a good way to deal with life. It is OK to take a step forward irrespective of the cloudy path ahead even if the time isn't right just yet. Lets hope that the efforts we take opens up the opportunities we are longing for. Worst, let them give us positive vibration by taking us away from the mood of dullness.

Lets step on today and the days forward with hope and courage even if the path is filled with the absence of light, after all the world doesn't end at your feet unless otherwise you decide not to take your next step.

Paul Arockiam.