நம் நாட்டில் ஒருசில, அரசியல் காரணங்களினால் இப்போது 'பல' என்று ஆகிவிட்ட, விஷயங்களைப் பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் விமர்சிப்பதற்கும் மிக அதிகமான தைரியம் தேவைப்படுகிறது. தைரியத்தின் எல்லைகள் தொட வேண்டிய கடவுள் கொண்டு காசு செய்யும் தலைப்பை கையில் எடுத்துக் கொண்டு கொஞ்சமும் கால்கள் நடுங்காமல் பயணிக்கும் PK-யை முதுகில் தட்டிக் கொடுத்து "வாவ்(wow)" சொல்லாமல் இருக்க முடியவில்லை.
மனிதனையும் இவ்வுலகத்தையும் படைத்த கடவுளை மறந்து விட்டு மனிதனும் இவ்வுலகமும் படைத்த கடவுளை வணங்குவதும் அவ்வாறு வணங்க தூண்டி சக மனிதனின் பலவீனத்தையும் பயத்தையும் சாதகமாக்கி அவனை சுரண்டியும் தவறான திசைகளில் அவனைக் கையாண்டும் அதன் மூலம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியலையும் அதை சார்ந்த நாட்டின் நடப்புகளையும் நேர்த்தியான நகைசுவையுடனும் அதே சமயம் மனிதரின் மனம் நோக கூடாது என்னும் மிகுந்த கவனத்துடனும் எடுத்துக் காட்டி கேள்விகளின் மூலம் தெளிவுற செய்யும் PK ஒருமுறையாவது நிச்சயமாக சந்திக்கப்பட வேண்டியவன்.
எடுத்துக் கொண்டிருக்கும் கதையின் கரு மிகவும் உணர்வுபூர்வமான ஒன்று என்பதை அறிந்து, தான் முன் வைக்கும் கருத்தை கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் சொல்ல வேண்டும் என்னும் முனைப்புடன் கதையின் ஆசிரியர் தேர்ந்தெடுத்த கதை சொல்லும் விதத்தை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஒரு குழந்தையின் களங்கமற்ற மனதை சித்தரித்தே இக்கேள்விகளை மனிதர் மனம் நோகாத வகையில் முன் வைக்க முடியும் என்பதை கதையின் ஆசிரியர் புரிந்தே இருக்கிறார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த PK கதாப்பாத்திரத்தின் பின்னணி மிகவும் அறிவார்ந்த தேர்வு.
தன் கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக முன் வைத்து விட்டப் பிறகும் பல மனிதரின் இருத்தலிற்கான இன்றைய ஒரே நம்பிக்கையை (the only hope left for the survival of many people) சிதைக்காமல் தனது விவாதத்தை முடித்துக் கொள்ளும் கதை ஆசிரியரின் சமூகம் மீதான அக்கறை (care for the society) மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மதத் தலைவரான தபாஸ்வி மஹாராஜிக்கும் (Tapasvi Maharaj) PK-விற்கும் நடக்கும் இறுதி விவாதத்தில் தன் கருத்தின் ஆழத்தை பதிய வைக்க படத்தின் ஆரம்ப காட்சிகளின் மற்றொரு பரிமாணத்தை காண்பிப்பது மாஸ்டர் ஸ்ட்ரோக்.
நகைசுவையுடன் ஒரு படத்தை ஆரம்பித்து, கதை நகர நகர நகைசுவையின் வீரியத்தை அதிகரித்து - அதே சமயம் தன் கருத்துகளை ஆணித்தரமாக கேள்விகளின் மூலம் பதித்துக் கொண்டே சென்று -, இறுதியின் சட்டென்று குண்டூசி விழும் சப்தம் கூட கேட்கும் அளவிலான நிசப்தத்தை, அதிர்வை ஏற்படுத்தி முடிக்கும் திரைக்கதை அவ்வளவு எளிதாக எழுதப்படக் கூடியதல்ல. அதை செய்திருக்கும் திரைக்கதை ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
படைத்தவனைக் (கடவுள்) காணவில்லை என்று நோட்டீஸ் கொடுப்பதன் மூலம் கவனத்தை ஈர்த்து நகரும் PK, படைத்தவன் காணாமலடிக்கப்பட்டு இருக்கிறான் என்று சொல்லி நம் கண்களில் இருந்து மறைந்து விடைபெறும் போது திரை இருள்கிறது. நம் கண் முன்னே ஒரு வெளிச்சம் பிறக்கிறது.
PS: சமீபத்தில் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் PK (மொழி: ஹிந்தி).
--
பால் ஆரோக்கியம்

No comments:
Post a Comment