Tuesday, June 10, 2014

[ கவிதை ] பெயரிடப்படாதப் பிரியங்கள்..

பெயரிடப்படாத உன் பிரியங்கள் 
சில நேரங்களில் 
ஏற்படுத்தவே செய்கின்றன 
சலசலப்பை..

முதுகை மட்டுமே காட்டும் 
இவ்வுலகில்
மலர்ந்த முகத்துடன் நெருங்கும் 
நீ 
எங்கிருந்து வந்தவள்..?

'என்ன வேண்டும்..?'
என்னும் கேள்வியை 
புன்னகையால் எதிர் கொள்கிறாய் 
பிறகு 
'எதுவும் வேண்டாம்'
என்று சொல்லி 
எல்லாம் தந்து செல்கிறாய்..

பெயரிட 
விரும்புகிறேன்..

உன் பிரியங்களை அல்ல 
மனிதர் என்பதிலிருந்து 
விலகி நிற்கும் 
உன் பிறப்பின் வகையை 

பால் ஆரோக்கியம்.
10-ஜூன்-2014.

No comments:

Post a Comment