Sunday, June 8, 2014

எல்லையற்ற புரிதல்கள்..

புரிதல்களில் உன் உலகைத் தொலைத்து விடாதே. சிலவற்றை புரிந்து கொள்ளாதிருத்தாலே நலம். நீ நல்லவன்(ள்) என்பது அவர்களுக்கு தெரியும் கணத்தில் அவர்களது மனதின் ஓரத்தில் ஏதோவொன்று முளை விடலாம். அது உனக்கு எதிராக பின்னாளில் பயன்படுத்தப்படலாம்.

புரிதல்களுக்கும் ஒரு எல்லையை நாம் நிர்ணயிக்க வேண்டியதாகவே இருக்கிறது. நம் மென்மையான தன்மையை ஆதாயமாக்கிக் கொள்ளும் சில மனிதர்களிடம் இருந்து நம் சுயத்தை பாதுகாத்துக் கொள்ள அது மிக முக்கிய தேவையாக இருக்கிறது. அதீத புரிதல் உள்ளவர்களுக்கு அதுவே ஆபத்தாகிப் போகும் சிக்கல் இருக்கவே செய்கிறது. 

நான் பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். அனுபவித்தும் இருக்கிறேன். அதனால் சொல்கிறேன். புரிதல்களில் உன் உலகம் தொலைத்து போய் விடாதபடிக்கு கவனமாய் இரு.

பால் ஆரோக்கியம்.
08-ஜூன்-2014.

No comments:

Post a Comment