Friday, June 13, 2014

[ கவிதை ] அம்பு

புதர்களில் மறைந்து மறைந்து 
நகரும் அம்மனிதர்கள் 
ஆபத்தற்றவர்களே என்று 
தெரிந்திருந்தாலும் கூட 
ஏனோ எய்து விடுகிறேன் அம்பை 

மறைதலும் 
பின்  அரும்புதலும் 
அவர்களின் இயல்பே 
என்றாலும் கூட 
பொருத்திப் பார்க்க இயலவில்லை 
அவ்வியல்பை யாருடனும் 
விலங்குகளைத் தவிர

பிறகொரு நாள் 
ஏதோவொரு அம்பு 
சீறி பாய்ந்து வந்தது 
என்னை நோக்கி 

பால் ஆரோக்கியம்.
13-ஜூன்-2014.

No comments:

Post a Comment