அவர்கள் தம் நிலைப்பாட்டை அவ்வப்போது நமக்கு தெரியப்படுத்திய வண்ணமே இருந்தனர். நாம் தான் மிகுந்த அலட்சியம் காட்டினோம். வயதின் திமிரும், அடையும் சக்தியின் மீதான அசட்டு நம்பிக்கையும் நம் செவிகளை அடைத்துக் கொண்டிருந்தன. நாம் கடைசி வரை நம் சொற்பேச்சை கேட்பவர்களாகவே இருக்கவில்லை.
நடப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என்று கூற முனைந்த உள்மனதை நாம் உள்ளே வைத்துப் பூட்டி, சாவியை தலை சுற்றி தொலைவில் எறிந்தோம். சாத்தியங்கள் குறைவான அந்த சவால் நமக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் வெற்றியடையும் போது கிடைக்க இருக்கும் புகழையும் நிறைவையும் எண்ணி நாம் கனவில் மிதந்தோம். நழுவிக் கொண்டிருக்கும் நிகழ்காலம் எதிர்காலத்தை சூறையாடிக் கொண்டிருப்பதை நாம் கண்டு கொள்ள விரும்பவில்லை. நாம் நம்மை மறந்திருந்தோம். அவர்களும் நம்மை மறந்திருந்தனர்.
பிறகு ஒருநாள் வந்தது. தாம் தொடர்ந்து சொல்லி வந்த தமது நிலைப்பாட்டை மீண்டும் நமக்கு அறிவுறுத்த அவர்கள் அங்கே இல்லை. அவர்கள் நமது அலட்சியத்தின் பால் சலிப்படைந்து இருக்க வேண்டும். அல்லது நேரமின்மையின் எல்லையை தொட்டிருக்க வேண்டும். அல்லது அவர்கள் நிர்ணயித்து இருந்த நேரம் வந்திருக்க வேண்டும். அப்போது நமக்கு முன் எதுவுமே இல்லாமல் போய் விட்டது. நாம் மிகவும் யோசித்தோம். பிறகு கற்பனையின் உதவியுடன் நம்மை சுற்றி அடர்த்தியான பனி மூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டோம்.
அவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்றும், பனி மூட்டத்தின் காரணமாகவே அவர்கள் நம் கண்களுக்கு தெரிய மறுக்கின்றனர் என்றும், விரைவில் சுட்டெரிக்கும் சூரியன் உதிப்பான் என்றும் நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொண்டோம். பூமி நம் கால்களுக்கு கீழே சுழல்வதை நிறுத்தவேயில்லை.
பால் ஆரோக்கியம்.
13-ஜூன்-2014.

No comments:
Post a Comment