ஒவ்வொரு பிறப்பின் போதும்
ஏதோவொரு இறப்பு
நினைவில் வந்து போகிறது
ஒவ்வொரு சிரிப்பின் போதும்
ஏதோவொரு அழுகை
சப்தமின்றி தழுவி செல்கிறது
ஒவ்வொரு நெகிழ்வின் போதும்
முதுகின் மையத்தில்
ஏதோவொன்று குறுகுறுக்கிறது
ஒவ்வொரு தழுவலின் போதும்
மனதின் அந்தரங்க ஓரத்தில்
ஏதோவொன்று பிசுபிசுக்கிறது
புதிதாய் ஒன்று அகப்படும் போது
சப்தமின்றி அழிக்கப்படுகின்றன
பழையவற்றின் சுவடுகள்
பால் ஆரோக்கியம்.
06-ஜூன்-2014.
No comments:
Post a Comment