Friday, April 4, 2014

குழந்தைகள் !!

நான்: அப்ப உன் பேச்சு கா..!
காவ்யா: பழம் பா..
நான்: நீ தான் உன் ரைட்டிங் டேபிளை தர மாட்றல்ல.. போ.. உன் பேச்சு கா..
காவ்யா: ஏன்ப்பா கா விடுற.. பழம் பா..
நான்: அப்ப உன் டேபிளை தர்றியா..? பழம் விடுறேன் ?
காவ்யா: தர மாட்டேன்..
நான்: அப்ப கா..
காவ்யா: ஹே பழம் பா..
நான்: போ..
காவ்யா:பழம் பா..
நான்: டேபிள் தர்றியா..?
காவ்யா: தர மாட்டேன்..
நான்: அப்ப கா தான்..
காவ்யா: ஏன்ப்பா.. பழம் பா..
நான்: சரி போ.. பழம்..
காவ்யா: <சிரிப்பு + புன்னகை>

குழந்தைகளுக்கு எப்படியோ அந்த சூட்சுமம் தெரிந்து இருக்கிறது. நாம் விரும்பியதை தராமலே அவர்கள் விரும்பியதை பெற்று கொள்ளும் அந்த சூட்சுமம்.

பால் ஆரோக்கியம்.

No comments:

Post a Comment