....
நான் வேறொன்றாக இருக்க வேண்டும் போல இருக்கிறது என்கிறாய்.
அதைத் தானே திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டிருந்து விட்டார்கள். வேறு ஒருவராக இரு. கௌதம புத்தரைப் பார். கிருஷ்ணரைப் பார். இயேசுவைப் பார். ஒரு புத்தனாக இரு. ஒரு கிருஷ்ணனாக இரு. ஒரு இயேசுவாக இரு. அப்படி இருக்க வேண்டும் என்று நீயும் முயன்று கொண்டிருந்தால் விரக்தி தான் மிஞ்சும். நீ புத்தனாக இருக்க முடியாது என்பதால் தான் அவ்விரக்தி. ஒரு புத்தராக இருக்கவல்ல நீ வந்திருப்பது. நீ ஒரு கிருஷ்ணராக முடியாது. இயேசுவாக முடியாது. நீ நீயாகத் தான் இருக்க முடியும்.
....
நீ நீயாக இருக்க வேண்டும். வேறு யாராகவும் இருக்க வேண்டியதில்லை. அது தான் புத்தத்தனம் என்பது. நீ நீயாக இருப்பது. அது தான் கிறிஸ்துவ உணர்வென்பது. நீ நீயாக இருப்பது. புத்தர் பிற யாராவதுடைய நகலா என்ன? அவருக்கு முன் மிகப் பெரிய மகான்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியுமே. அவரிடம் கூட, நீ கிருஷ்ணனாக இருக்க வேண்டும், நீ பர்ஷவநாத்தாக இருக்க வேண்டும், ஆதிநாதராக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள்.
அழகான புராண இதிகாசக் கதைகளைக் கேட்டிருந்திருப்பார். ராமர், கிருஷ்ணர், பரசுராமர் என்று எல்லாருடைய கதைகளையும் தான். பாரம்பரியம் என்பது அவருக்கும் இருந்தது. ஆனால் பிறராக இருக்க வேண்டும் என்று அவர் எப்போதும் முயன்றதேயில்லை. தான் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினார். தான் தானாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். யாருடைய நகலாகவும் தன்னை அவர் ஆக்க முயலவில்லை. அதனால் தான் அவர் ஒரு நாள் ஞானி ஆக முடிந்தது.
ஆபிரகாமாகவோ, மோசஸாகவோ, எஸகியலாகவோ தான் இருக்க வேண்டும் என்று இயேசு நினைத்ததில்லை. இயேசு தானாக இருக்க முயற்சித்தார். அது தான் அவருடைய குற்றமாகிப் போனது. அதனால் தான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.
இயேசு மட்டும் மோசஸைப் போல இருந்திருந்தால் அவரைச் சிலுவையில் அறிந்தவர்களே அவருக்கு முன் மண்டியிட்டு வணங்கியிருப்பார்கள். பத்துக் கட்டளைகளைப் பதிவு செய்து திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு இசைத்தட்டாக இருந்திருந்தால், யூதர்கள் அவரை வணங்கியிருப்பார்கள். ஆனால் அவர் தானாக இருக்க முயன்றதால் வேறு வழியில்லாமல் அவரைச் சிலுவையில் அறைய வேண்டியதாகிவிட்டது.
உளுத்துப் போன இந்தச் சமுதாயத்துக்கு, இந்த கூட்டத்துக்கு, இந்த மந்தைக்கு, தனித்தவனாக இருப்பவனைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
ஒரு சாக்ரெட்டிஸை ஏற்றுக் கொள்வதென்பது அவர்களுக்கு முடியாத காரியம்...
-- ஓஷோ
பால் ஆரோக்கியம்.
28-ஏப்ரல்-2014.

No comments:
Post a Comment