Tuesday, April 22, 2014

கவிதை: இல்லாத தீவைத் தேடி..

இல்லாத தீவொன்றிற்கு 
பயணிக்க பிரயாசைப்பட்டு 
வரைபடம் தேடி 
உலகை அலசுகிறோம் 

இல்லாத தீவின் 
அகப்படாத வரைபடம் 
பறிக்க ஆரம்பிக்கிறது
நம் நித்திரையை 
நம் பசியை 
நம் நிம்மதியை 

நமகென்று இருக்கும் 
ஒவ்வொன்றும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்க 
வரைபடம் கைப்பற்றும் ஒரே நோக்குடன் 
நம்மையே நாம் 
ஆழ்த்திக் கொள்கிறோம் 
இல்லாத ஒரு உலகத்திற்குள் 

அங்கே 
நமக்கான வரைபடத்தை 
சிரத்தையுடன் தேடித் பிடித்து 
பயணிக்கும் வழிகளில் 
நீளத்தில் குறைவான ஒன்றை 
வேகமாய் தேர்ந்தெடுக்கிறோம் 

நாமிருக்கும்இல்லாத இவ்வுலகம் 
கலைக்கப்படலாம் எப்பொதுமென்னும் சிந்தனை 
முடுக்கி விடுகின்றது 
நம் பயணத்தின் வேகத்தை 

இறுதியில் 
இல்லாத அத்தீவில் 
இருக்கின்ற நம்மை 
எப்படி இருத்திக் கொள்வதென்று 
செய்வதறியாது விழிக்கிறோம்

பிறகு 
வழிகள் ஏதுமின்றி 
அல்லது ஒரே வழியென்று நம்பி 
இல்லாமல் செய்து கொள்கிறோம்
நம் இருப்பை 

பால் ஆரோக்கியம்.
22-ஏப்ரல்-2014.

No comments:

Post a Comment