Thursday, April 10, 2014

கவிதை: அலங்காரம்

வார்த்தைகள் கட்டுப்படுத்துவதை 
நாம் மிகவும் வெறுத்தோம் 

அவ்வேளைகளில்
அதிகமாக சண்டையிட்டுக் கொண்டோம்
முடிந்த மட்டும் 
எதிர்த்து பேசினோம் 
எதிர் திசையில் 
வேகமாய் பயணிக்க தொடங்கினோம் 

பிறகு 
அவர்கள் 
கற்றுக் கொண்டார்கள் 

வார்த்தைகள் கட்டுப்படுத்துவதை 
நாம் மிகவும் நேசிக்க ஆரம்பித்தோம் 
அவற்றை அவர்கள் 
அலங்கரிக்க தொடங்கியவுடன்

பால் ஆரோக்கியம்.
10-Apr-2014.

No comments:

Post a Comment